குர்பான் மாடறுப்புக்கு தடை இல்லை - பிரச்சினைகள் ஏற்பட்டால் என்னை தொடர்புகொள்ளவும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

குர்பான் மாடறுப்புக்கு தடை இல்லை - பிரச்சினைகள் ஏற்பட்டால் என்னை தொடர்புகொள்ளவும்.


குர்பான் மாடறுப்பு தொடர்பில் கடந்த சில நாட்களாக பல சிக்கல்கள் நிலவி வந்தன. நாட்டின் பல

பாகங்களிலும் உள்ள முஸ்லிம்கள் இது தொடர்பில் சரியானதொரு தீர்வின்றி தெளிவற்ற நிலையில் இருந்தார்கள்.


 இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களிடமும் இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க அவர்களிடம் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றிருக்கின்றனர்.


அதன்படி முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு தங்களது குர்பான் நடவடிக்கைகளுக்காக மாடுகளை அறுப்பதற்கு பிரதமரினால்  அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.


ஒரு சில பிரதேசங்களில் இன்னும் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றவொரு வதந்தி பரவிக்கொண்டிருக்கின்றது.  அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென்றும், அனுமதி பெறப்பட்டுள்ள சந்தர்ப்பங்களிலும் நாட்டின் சில பகுதிகளில் குர்பான் மாடறுப்பு தொடர்பில் ஏதேனும் சிக்கள்கள், பிரச்சினைகள் ஏற்பட்டால் தனக்கு தெரிவிக்குமாறும், அதற்கான தீர்வினை பெற்றுத்தர தயாராக இருப்பதாகவும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார்.


குர்பான் மாடறுப்புக்கு  பிரச்சினைகள் ஏற்பட்டால் தொடர்புகளுக்கு - 0774050534


ஊடகப்பிரிவு.

பா.உ.இஷாக் ரஹுமான் 

குர்பான் மாடறுப்புக்கு தடை இல்லை - பிரச்சினைகள் ஏற்பட்டால் என்னை தொடர்புகொள்ளவும். குர்பான் மாடறுப்புக்கு தடை இல்லை -  பிரச்சினைகள் ஏற்பட்டால் என்னை தொடர்புகொள்ளவும். Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5