காதலை ஏற்காத பெண்ணுக்கு நடந்த பயங்கரம்... அரச அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற கோர சம்பவம்.யாழில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் நபரொருவர்
 ஒரு தலைக் காதல் விவகாரத்தால் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு, தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழில் உள்ள அரச திணைக்களத்தில் பணியாற்றி வரும் ஆண் ஊழியரொருவர், அங்கு கடமையாற்றும் சக பெண் ஊழியர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரின் காதலை பெண் ஊழியர் ஏற்க மறுத்து வந்த நிலையில், அவர் அப்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

தொந்தரவு தாங்க முடியாத அப்பெண் ஒரு கட்டத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் அலுவலகத்தில் இருவரும் கடமையில் இருந்துள்ளனர். திடீரென அந்நபர், பெண் ஊழியர் மீது சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு, அலுவலக மலசலகூடத்திற்குள் சென்று தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து இரண்டு நபர்களையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சக ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை , கத்தியால் குத்திய நபரின் அலுவலக மேசைப் பகுதியில் வேறு சில கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காதலை ஏற்காத பெண்ணுக்கு நடந்த பயங்கரம்... அரச அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற கோர சம்பவம். காதலை ஏற்காத பெண்ணுக்கு நடந்த பயங்கரம்... அரச அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற கோர சம்பவம். Reviewed by Madawala News on July 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.