Video : இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பெரிய இரத்தினக்கல், கூறப்படும் அளவுக்கு பெறுமதி வாய்ந்தது கிடையாது.



இரத்தினபுரி-கஹவத்தை பகுதியில் கிடைத்த உலகின் மிக பெரிய
 இரத்தினக்கலின் பெறுமதி தொடர்பில் தற்போது பரஸ்பர கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.


தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் அளவிற்கு குறித்த கல் பெறுமதி வாய்ந்தது கிடையாது என இரத்தினக்கல் துறை சார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 510 கிலோகிராம் எடையுடைய இரத்தினக்கல் கொத்தணியொன்று, இரத்தினபுரி-கஹவத்தை பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கிடைத்திருந்தது.

இந்த கல்லின் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் என நேற்று முன்தினம் (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு இரத்தினக்கல் அதிகார சபையின் தலைவர் திலக்க வீரசிங்க தெரிவித்திருந்தார்.

எனினும், தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் அளவிற்கு, குறித்த கல் பெறுமதி அற்றது என அந்த துறை சார் நிபுணர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
Video : இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பெரிய இரத்தினக்கல், கூறப்படும் அளவுக்கு பெறுமதி வாய்ந்தது கிடையாது. Video : இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட  உலகின் மிக பெரிய இரத்தினக்கல், கூறப்படும் அளவுக்கு பெறுமதி வாய்ந்தது கிடையாது. Reviewed by Madawala News on July 29, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.