கர்ப்பிணி தாய்மார்களுக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்.... தாய்மார்கள் ஆர்வம்.



ஹஸ்பர் ஏ ஹலீம்_

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கைகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசி ஏம்றப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இடம் பெற்றது.


குறித்த கொவிட்19 தடுப்பு மருந்து முதலாவது டோஸ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்று(23)குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் தலைமையில் இடம் பெற்றது. கச்சக்கொடிதாதீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் முனைச்சேனை கிராமோதய நிலையத்திலும் இடம் பெற்றது கர்ப்பிணி தாய்மார்களுக்காக சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் பணி துரிதமாக இடம் பெறுகின்றது.  


இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் அவர்கள்


கர்ப்பிணி தாய்மார்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியினை பெறுவதற்காக வருகை தருகிறார்கள் அபாய நிலையில் உள்ள சுமார் 171 கர்ப்பிணி தாய்மார்கள் தெரிவு செய்யப்பட்டு கொரோனா தடுப்பு மருந்து ஊசியை பெற்று வருகிறார்கள் அரசாங்கத்தின் இவ்வாறான கொரோனா தடுப்பு மருந்து திட்டத்துக்கு மக்கள் நன்றி தெரிவிப்பதுடன் சுகாதார அமைச்சினையும் மக்கள் பாராட்டுகிறார்கள்.


தடுப்பு மருந்து தொடர்பிலான விழிப்புணர்வுகளை கடந்த வாரம் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் குடும்பஸ்தார்கள் கணவன்களுக்கு என வழங்கியிருந்தோம் இதனால் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசிகளை பெற்று கொள்வதனை அவதானிக்க முடிவதாகவூம் தெரிவித்தார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்.... தாய்மார்கள் ஆர்வம்.  கர்ப்பிணி தாய்மார்களுக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்.... தாய்மார்கள் ஆர்வம். Reviewed by Madawala News on June 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.