15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்ற சம்பவம்... விசாரணையில் வெளியாகிய மேலதிக தகவல்கள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்ற சம்பவம்... விசாரணையில் வெளியாகிய மேலதிக தகவல்கள்.பதினைந்து வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்கு

 பயன்படுத்தியதற்காக 35
வயதான ஒருவர் கல்கிஸ்ஸ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கல்கிஸ்ஸ பகுதியில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்த நபர் அந்த சிறுமியை தினசரி பலருக்கும் பாலியல் தேவைக்காக விற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


குறித்த சிறுமியை 3 அரை லட்சம் ரூபாவுக்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு சந்தேக நபர் முதன் முதலில் வழங்கியமை மற்றும் கடந்த 3 மாதங்களில் சந்தேக நபர் சிறுமியை பல நபர்களுக்கு மணித்தியாளத்திற்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.டெல்கொட பிரதேசத்தில் வசிக்கும் அவரது தாயிடமிருந்து சந்தேகநபர் சிறுமியை பணம் கொடுத்து வாங்கியதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்,


அதே நேரத்தில் இது தொடர்பாக அந்தப் பெண்ணிடமிருந்து காவல்துறை அறிக்கை பதிவு செய்துள்ளது.

மேலும் குறித்த பெண்ணின் தாயை வர்த்தகர் ஒருவருக்கு 21 லட்சம் ரூபாவுக்கு வழங்கியுள்ளதாக மேலும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் நேற்று மொரட்டுவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.இந்த காலகட்டத்தில் சந்தேக நபருடன் தொடர்புகொண்டவர்களை அடையாளம் காண விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்ற சம்பவம்... விசாரணையில் வெளியாகிய மேலதிக தகவல்கள். 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்ற சம்பவம்... விசாரணையில் வெளியாகிய மேலதிக தகவல்கள். Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5