ஜனாஸா அறிவித்தல் : பர்ஸாத் ஆசிரியர் அவர்கள் காலமானார்கள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஜனாஸா அறிவித்தல் : பர்ஸாத் ஆசிரியர் அவர்கள் காலமானார்கள்.அட்டாளைச்சேனையை சேர்ந்தவரும் - ஏறாவூர் அல்
முனீரா வித்தியாலயத்தில் அண்மையில் ஆசிரியராக இணைந்து கொண்டவருமான சகோதரர் பர்ஸாத் அவர்கள் இன்று காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...


அட்டாளைசேனை கல்வியற்கல்லூரியில் பயிற்சியினை பூர்த்தி செய்து
ஏறாவூர் அல்முனீரா வித்தியாலயத்தில் நியமனம் பெற்று ஒரு சில மாதங்களே ஆன நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாலை வேளை பாடசாலைக்கு வருவதற்காக பயணித்த வேளை மோட்டார் சைக்கிள் மாட்டுவண்டிலுடன் மோதியதில் வயிற்று பகுதியினுள் ஏற்பட்ட உபாதை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வபாத் ஆகி உள்ளார்.

மிக இளம் வயதிலேயே இந்த உலகை விட்டு விடைபெற்றுள்ள சகோதரன் பர்சாத் இற்காக இறைவனை பிரார்த்திப்போம்...

தகவல் : Mohamed Azmy

ஜனாஸா அறிவித்தல் : பர்ஸாத் ஆசிரியர் அவர்கள் காலமானார்கள். ஜனாஸா அறிவித்தல் : பர்ஸாத் ஆசிரியர் அவர்கள் காலமானார்கள். Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5