உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி வெளிப்படும் வரை அச்சுறுத்தல் நீடிக்கும்.

 (மொஹமட் ஆஸிக்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி வெளிப்படும் வரை  அச்சுறுத்தல் தொடரும் என்று  ஜக்கிய மக்கள்

சக்தியின் கண்டி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தபால்  மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சருமான எம்.எச். அப்துல் ஹலீம்  தெரிவித்தார்.

. இன்று 07 மாலை கண்டியின் மாவில்மடையில் அமைந்துள்ள  அவரது  அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவ்த்த அவர் இவ்வாறும் கூறினார்.

நூற்றுக ்கன்கான  உயிர்களைப் பலி கொன்ற உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று எதிர்வரும் ஏப்ரல் 21 ம ்திகதி இரு வருடங்கள் பூர்த்தியாகின்றன..   இத் தாக்குதலை ஆராய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு  நியமிக்கப்பட்டது. அக்குழுவின்  அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெ ளி வந்து. . உயிர்த்த ஞாயிரு  தாக்குதலின் சூத்திரதாரிகளை இந்த அறிக்கை வெளிப்படுத்தும் என்று நாங்கள் அனைவரும் நம்பினோம். அதைத்தான் நாம் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு கிடைத்து வெரும்  ஏமாற்றமே, இது வெறும் ஆவணமாக மாறிவிட்டது. அந்த நேரத்தில் பொறுப்பானவர்கள் தங்கள் பொறுப்புகளை புறக்கணித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக் கதை தாக்குதல் நடந்த ஆரம்ப காலத்திலே கூறப்பட்டது. இது ஒரு புதிய ஆணைக்குழுவினால்  அறியப்பட தேவையில்லை. பொறுப்பானவர்களில் சிலர் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பது இரகசியமல்ல. ஆனால் இதன் சூத்திரதாரி நாங்கள் அனைவரும் எதிர்பார்த்ததுதான். இது உள்நாட்டில் நடந்த சதியா  அல்லது வெளிநாட்டில் திட்டமிடப்பட்ட சதித்திட்டமா  என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.   இது முறையாக ஆராயப்பட்டதா இல்லையா என்ற கேள்வியும் உள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கு அறிக்கையில்  ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. இன்னும் பல தொகுதிகள் உள்ளன என்று கூறப்படுகிறது. அவற்றில் சில  ரகசியமாக ஜனாதிபதிக்கு  வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இதில் தெளிவு இல்லாத ஒரு சூழ்நிலையை நாங்கள் காண்கிறோம்.  அதனால்தான் கத்தோலிக்க மக்கள் ஞாயிற்றுக்கிழமை கறுப்பு தினமாக  போராட்டம் நடத்துகிறார்கள்.  இத் தாக்குதலுக்குப் பின் , நம் நாட்டில் நீண்ட காலமாக ஒற்றுமையிலும் சகோதரத்துவத்திலும் பணியாற்றி வந்த  முஸ்லிம் சிங்கள மக்களிடையே பெரும் வெறுப்பு உறுவானது . ஒரு பிளவு ஏற்பட்டது. அதை எப்போது சரிசெய்ய முடியும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்த போராட்டத்தை கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்கள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் முன்னெடுக்க வேண்டும். காரணம், எதிர்காலத்தில் நாம் அனைவரும் அச்சுறுத்தப்படலாம். இதன் மூல காரணத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், சூத்திரதாரி யார் என்று கண்டுபிடிக்க முடியாவிட்டால், அந்த அச்சுறுத்தல் நமக்கு இன்னும் உள்ளது. என்றார். 

2021 03 08 ஆஸிக் 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி வெளிப்படும் வரை அச்சுறுத்தல் நீடிக்கும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி வெளிப்படும் வரை அச்சுறுத்தல் நீடிக்கும். Reviewed by Madawala News on March 08, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.