சமூகம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் ...



கொரோனாவால் உயிரழக்கும் முஸ்லிம் ஜனசக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி, இன்று நள்ளிரவு வர்த்தமானி வெளியீடு – பா.உ.இஷாக் ரஹுமான் தெரிவிப்பு.

கொரோனாவால் உயிரழக்கும் முஸ்லிம்களின் ஜனசக்களை நல்லடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளிவர இருப்பதாகவும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார்.


கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனசாக்களை நல்லடக்கம் செய்யும் விடயம் இழுபறி நிலையில் இருந்துவந்த நிலையில் நாட்டில் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் உற்பட  முஸ்லிம் மற்றும் ஏனைய இன சகோதரர்களாலும் இதற்கெதிராக குரல் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் மிக நீண்டகால போராட்டத்துக்கு மத்தியில் இலங்கை அரசு ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமையை இட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இதற்கு அனுமதியளித்தமைக்கு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் பா.உ. இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு – பா.உ.இஷாக் ரஹுமான்
சமூகம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் ...  சமூகம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் ... Reviewed by Madawala News on February 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.