நாட்டின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, மிகப்பெரிய பூங்காவை 50,000 கோடி பாகிஸ்தான் ரூபாவுக்கு அடமானம் வைக்க முடிவு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

நாட்டின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, மிகப்பெரிய பூங்காவை 50,000 கோடி பாகிஸ்தான் ரூபாவுக்கு அடமானம் வைக்க முடிவு.பாகிஸ்தான் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, அந்நாட்டின்
மிகப்பெரிய பூங்காவை 50,000 கோடி பாகிஸ்தான் ரூபாவுக்கு அடமானம் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டதால், அந்நாட்டின் அந்நிய செலாவணியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதையடுத்து, அரசின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக, தலைநகர் இஸ்லாமாபாத்தில், 759 ஏக்கர் பரப்பளவில் உள்ள எப் 9 (F-9) பூங்காவை பிரதமர் இம்ரான் கான் அடமானம் வைத்து பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50,000 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பில் எதிர்வரும் நாளைய தினம் (26) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Siva Ramasamy
நாட்டின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, மிகப்பெரிய பூங்காவை 50,000 கோடி பாகிஸ்தான் ரூபாவுக்கு அடமானம் வைக்க முடிவு. நாட்டின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க,  மிகப்பெரிய பூங்காவை 50,000 கோடி பாகிஸ்தான் ரூபாவுக்கு அடமானம் வைக்க முடிவு. Reviewed by Madawala News on January 25, 2021 Rating: 5