சீனா தயாரிப்பு கொவிட் 19 வெக்ஸின் விரைவில் இலங்கைக்கு ?



சீனாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள Sinovac Biotech நிறுவனத்தின் தூதுக்குழுவினர் மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், Sinovac தடுப்பூசியின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


சீன வர்த்தக அமைச்சு மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் வைத்தியர் பாலித டி.பி கொஹொன ஆகியோர் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, PowerChina நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் He Bing மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் வைத்தியர் பாலித டி.பி கொஹொன ஆகியோருக்கிடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் குறித்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சீனா தயாரிப்பு கொவிட் 19 வெக்ஸின் விரைவில் இலங்கைக்கு ? சீனா தயாரிப்பு கொவிட் 19 வெக்ஸின் விரைவில் இலங்கைக்கு  ? Reviewed by Madawala News on January 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.