அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம்.மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அடுத்த

 ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, குசலா சரோஜினி வீரவத்தன தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவொன்றை நாம் இன்று ஸ்தாபித்துள்ளோம் என அவர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.


ஐவர் அடங்கிய குழு குறித்த சம்பவம்  தொடர்பாகத் தீவிரமாக ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் முழுமையான அறிக்கையையும் ஒரு வாரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும் வழங்கவுள்ளார்கள்.


பொலிஸ்மா அதிபர் ஊடாக, குற்றப்புலனாய்வுப் பிரி வினருக்கும் இதுதொடர்பான விசாரணைகளை மேற் கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவமானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்.


அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம். நாம் விசாரணைகளை மேற்கொண்டு, விரை வில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்போம்.


சிறைச்சாலைகளின் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளவும் அரசாங்கம் முடிந்தளவிலான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம். Reviewed by Madawala News on December 01, 2020 Rating: 5