VIDEO இணைப்பு : 66 நாட்களுக்கு தொடர்ந்து இரவு மட்டுமே...

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

November 19ம் திகதி அஸ்தமனமாகும் சூரியன் January 22ம் வரை அதாவது 66 நாட்களுக்கு

பூமியின் ஒரு நகரில் உதிக்காது என்றால் நம்ப முடிகிறதா. இதோ முழு விவரங்களையும் பார்க்கலாம்.


நீ மறைய நான் வருகிறேன் நான் மறைய நீ வா என சூரியனும் நிலவும் உலகை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.



அமெரிக்காவில் அலஸ்கா மாகாணத்தின் ஒரு நகரத்தில் நேற்று முன்தினம் அஸ்தமனமாகும் சூரியன் 66 நாளுக்குப் பிறகுதான் உதிக்குமாம். சூரிய ஒளியில்லாமல் 66 நாட்களுக்கு இரவு மட்டுமே இருக்கும் என்றால் அந்த நகர மக்களின் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்.


சூரிய வெப்பம் இல்லாதபட்சத்தில் இயற்கை சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி இருக்கும்பட்சத்தில் அலஸ்காவின் பாரா ( Barrow ) என்று அழைக்கப்படும் உத்கியாக்விக் ( Utqiagvik ) நகரில் 60 நாட்களுக்கு சூரியன் இல்லா நகரமாக இருக்க போகிறது. November 19ம் திகதி முதல் January 22 வரை அந்த நகரில் சூரிய உதயமே இருக்காது.


பூமி அச்சின் சாய்வின் காரணமாக இந்த நிகழ்வு குளிர்காலத்தில் நடக்கிறது. இந்நிகழ்வு துருவ இரவு அதாவது Polar Night என்று அழைக்கப்படுகிறது. பகலே இல்லாமல் 24 மணிநேரமும் இரவாக இருக்கும் இந்த நிகழ்வு வடக்கு மற்றும் தென் துருவ பகுதிகளில் நடக்கிறது. பூமியின் சாய்வானது சூரியனின் வட்டு எதுவும் அடிவானத்திற்கு மேல் தெரியாதபடி செய்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.



24 மணி நேரமும் இரவாக இருக்கும் இந் நிகழ்வு பாரோ நகரம் மற்றும் ஆர்க்டிக் வட்டத்திற்குள்ள பிற இடங்களில் நடக்கும் சாதாரண நிகழ்வாகும் என கூறப்படுகிறது. இந்த வருடம் பாரோ நகரில் முழு இருளுடன் துருவ இரவு நடக்க இருக்கிறது. பூமியின் வடக்கு, தென்துருவ பகுதிகளின் பல்வேறு இடங்களில் குளிர்காலத்தின்போது இந் நிகழ்வு நடக்கிறது.




November 20 முதல் January 22ம் திகதி வரை சூரியனை பாரோ நகர மக்கள் பார்க்க மாட்டார்கள். இந்த நிகழ்வு இந்த நகரில் மட்டும் இல்லை வேறு சில நகரங்களில் நடக்கும். இதில் முதன்மை பட்டியலில் பாரோ நகரம் இருக்கிறது. இந்த நிகழ்வு அந்த நகர வாசிகளின் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் என கூறப்படுகிறது.

VIDEO இணைப்பு : 66 நாட்களுக்கு தொடர்ந்து இரவு மட்டுமே... VIDEO இணைப்பு :  66 நாட்களுக்கு தொடர்ந்து இரவு மட்டுமே... Reviewed by Madawala News on November 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.