20க்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்றைய வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை !!



2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 


நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 


பிரதமரால் வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று வரையில் 4 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. 


அதன்படி, இன்று சற்று முன்னர் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. 


அதனடிப்படையில் வரவு செலவு திட்ட ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது. 


இந்த வாக்களிப்பில் 20 ஐ ஆதரித்து வாக்களித்த  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹரீஸ் , தௌபீக் , பைஸல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் உள்ளிட்ட நான்கு பேரும் கலந்து கொள்ளவில்லை.


இன்று  கட்சி தலைமையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் MP ஒருவர் மடவளை  நியுசுக்கு குறிப்பிட்டார்.


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களித்தார்.



20க்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்றைய வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை !! 20க்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்றைய வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை !! Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.