ஊடகங்களில் இனவாத கருத்து... சர்ச்சைக்குள்ளான ஜமாலியா அரபுக் கல்லூரி விவகாரம் குறித்து உண்மை இதுதான் என விளக்குகிறார் மத்ரசா அதிபர் சம்சுதீன் .


 தொகுப்பு: முஹம்மட் ஹாசில் (ஊடகவியலாளர்) 

அநுராதபுரம், ஹெட்டுவெவ அரபுக் கல்லூரி பற்றி அண்மையில் சிங்கள ஊடகங்கள்

மூலம் வெளியான தவறான செய்தி பற்றிய உண்மைத்தன்மை தொடர்பில், அரபுக் கல்லூரியின் அதிபர் சம்சுதீன் தெரிவிக்கின்றார்.

அநுராதபுர மாவட்டம், கஹடகஸ்திகிலிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஹெட்டுவெவ கிராமத்தில் 1995 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஜமாலியா அரபுக் கல்லூரியானது இந்த ஆண்டு தனது 25 வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழாவையும் கல்லூரியின் ஏழாவது பட்டமளிப்பு விழாவையும் கடந்த 11.10.2020 அன்று நடாத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதோடு அவ்விழாவில் 25 வருட பூர்த்தியை முன்னிட்டு கல்லூரி மாணவர்களின் ஆக்கங்கள், ஆசிரியர்களின் வாழ்த்துச்செய்திகள், அதிதிகளின் வாழ்த்துச்செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கி 'வெள்ளிவிழா சிறப்பு மலர்' எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. 

இதற்கிடையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நமது நாட்டில் மீண்டும் பரவியதை அடுத்து 06.10.2020 அன்று சுகாதார அமைச்சினால்

நாட்டில் களியாட்ட நிகழ்வுகள், தனியார் வைபவங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் தேவையற்ற ஒன்று கூடல் என்பனவற்றுக்கு மறு அறிவித்தல் வரை தடைவிதித்தது.

இதையடுத்து ஜமாலியா அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா மற்றும் ஏழாவது பட்டமளிப்பு விழாவையும் கல்லூரி நிர்வாகத்தால் நாட்டின் சூழ்நிலையைக் கருதி மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த விழாவில் வெளியிட தீர்மானித்த சஞ்சிகையானது மிஹிந்தலை நகரில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் அச்சுப்பதிப்புக்காக வழங்கப்பட்டிருந்தது, குறித்த வேலை நடைபெறும் போது அங்கே பணிபுரியும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலரால் அரபு எழுத்தணியில் இலங்கை வரைபட உருவில் வரையப்பட்ட ஆக்கம் ஒன்றை அவதானிக்கப்பட்டதையடுத்து, இவர்கள் இலங்கை முழுவதையும் அரபு நாடாக மாற்றப்பார்க்கின்றார்கள் எனக்கருதி தவறான புரிதலின் அடிப்படையில் இது தொடர்பில் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் 09.10.2020 அன்று முறையிட்டுள்ளனர்

இதையடுத்து மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தினூடாக குறித்த அச்சகத்தை நாடி ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த அச்சகத்தின் உரிமையாளர் கஹடகஸ்திகிலிய பிரதேசதில் அமைந்துள்ள ஜமாலியா அரபுக் கல்லூரியினால் அச்சுப்பதிப்புக்காக வழங்கப்பட சஞ்சிகை என தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த அரபுக் கல்லூரி நிருவாககத்திற்கு மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தினூடாக அழைப்பு விடுக்கப்பட்டு கல்லூரி அதிபர், செயலாளர் உள்ளிட்ட நிரவாகத்தை பொலிசாரால் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர். 

குறித்த விசாரணையின் போது அரபு எழுத்தாணி என்பது ஓர் கலை என்றும், அது நாம் எமது விருப்பத்திற்கமைய அரபு எழுத்துக்களை கொண்டு வரைதல் ஆகும், இதில் வேறு எதுவிதமான மறைமுக கருத்தக்களும் இல்லை என்பதனை மத்ரசா நிர்வாகம் பொலிசாருக்கு தெளிவுபடுத்தினர்

இதையடுத்து குறித்த 'அரபு எழுத்தாணி' கலை பற்றி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக ஒரு கடிதத்தினை பெற்றுத்தருமாறு, பொலிசாரால் அரபுக் கல்லூரி நிருவாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

மேலும் பொலிசார் குறித்த சஞ்சிகை அச்சுப்பதிப்பு செய்யும் அச்சகத்திற்கும் கல்லுரியின் நிர்வாகத்திற்கும் அவ் சஞ்சிகையின் சர்ச்சைக்குரிய வரைபடம் தொடர்பில் முழுமையான விசாரணை முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். 

இதனையடுத்து 10.10.2020 அன்று கல்லூரி நிர்வாகத்தால் குறித்த விடயம் சம்மந்தமாக, முஸ்லிம்கள் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன், அரபுக் கல்லூரி நிருவாகம் தொடர்புகொண்டு பிரச்சினையை தெளிவுபடுத்திய பின்னர் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்கு குறித்த கடிதத்தினை தொலைநகல் மூலம் வழங்குவதற்கு திணைக்களம் இணக்கம் தெரிவித்தது, 14.10.2020 அன்று தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 


இதையடுத்து 14.10.2020 மாலை மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்கு ஜமாலியா அரபுக் கல்லூரி நிர்வாகத்தை வரவழைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, குறித்த சஞ்சிகையை முழுமையாக சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு அதில் வேறு ஏதேனும் முரண்பாடுகள் உள்ளனவா என முழுமையாக ஆராய்ந்த பின்னரே சஞ்சிகையினை அச்சுப்பதிப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவும், வெளியிடவும் முடியும் என இறுதியாக உத்தரவிட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை இப்பிரச்சினையை சந்தர்ப்பமாக பயன்படுத்தி பல தமிழ், சிங்கள ஊடகங்கள் உண்மை நிலையை கண்டறியாது, இலங்கையை அரபு நாடாக மாற்றுவது தொடர்பிலான சஞ்சிகை ஒன்று வெளியிட குறித்து கல்லூரி தீர்மானித்திருந்தாகவும், அந் நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், அப்பட்டமான பொய்களை உள்ளடக்கி நாளுக்கு நாள் செய்திகளை வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

சர்ச்சைக்குரிய எழுத்தாணி  வரைபடம் 



ஊடகங்களில் இனவாத கருத்து... சர்ச்சைக்குள்ளான ஜமாலியா அரபுக் கல்லூரி விவகாரம் குறித்து உண்மை இதுதான் என விளக்குகிறார் மத்ரசா அதிபர் சம்சுதீன் . ஊடகங்களில்  இனவாத கருத்து... சர்ச்சைக்குள்ளான ஜமாலியா அரபுக் கல்லூரி விவகாரம் குறித்து உண்மை இதுதான் என விளக்குகிறார் மத்ரசா அதிபர் சம்சுதீன் . Reviewed by Madawala News on October 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.