சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தொடரும் ஜும்ஆ தொழுகைகள்.. #கல்குடா - Madawala News Number 1 Tamil website from Srilanka

சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தொடரும் ஜும்ஆ தொழுகைகள்.. #கல்குடா(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்ள
 பள்ளிவாசல்களுக்கு வருகை தருவோர் சுகாதார பழக்கவழக்கங்களை அவசியம் கடைப்பிடிக்குமாறு சுகாதாரப் பிரிவினர் வேண்டிக் கொண்டுள்ளனர்.

அந்தவகையில், கல்குடா தொகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் இன்று (16) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு வந்தவர்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து, வீடுகளில் இருந்து தொழுகை விரிப்புக்களை கொண்டு வந்து தொழுகையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

- படங்கள் தாருஸ்ஸலாம் ஜும்மா மஸ்ஜித் மீராவோடை

இதே வேளை
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய வைத்திய அதிகாரி அலுவலக பிரிவின் கீழுள்ள பள்ளிவாசல்களுக்கு தொழுகையினை நிறைவேற்ற வருவோர்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றுள்ள ஒருவர் இனங்காணப்பட்டால் ஏனையவர்களின் பாதுகாப்புக்காக வேண்டி இத்திட்டம் வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்கு வருவோர்கள் முகக் கவசம் அணிந்து, தொழுகை விரிப்புக்களை கொண்டுவந்து சமூக இடைவெளிகளை பேணி வணக்க வழிபாட்டில் ஈடுபடுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தொடரும் ஜும்ஆ தொழுகைகள்.. #கல்குடா சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தொடரும்  ஜும்ஆ தொழுகைகள்.. #கல்குடா Reviewed by Madawala News on October 17, 2020 Rating: 5