அண்மைய காலத்தில் 815 மத்ரசா மற்றும் அரபி கல்லூரிகள், 389 சர்வதேச பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை.


இந்த வருடம் பெப்ரவரி மாதம் நிறைவடையும் போது   815 மத்ரசா மற்றும் அரபி கல்லூரிகள்
முஸ்லிம் மதம் மற்றும் கலாச்சார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் 2019 ஆம் ஆண்டில் 389 சர்வதேச பாடசாலைகள், முதலீட்டு சபை மற்றும் நிறுவன சபை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் கல்வியமைச்சின் கீழ் இல்லாமையால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, கற்பிக்கப்படும் பாடங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட போட்டி பரீட்சைகள் ஊடாக குறித்த பாடசாலைகளின் மாணவர்களை மதிப்பிடுவதற்கு எந்தவொரு பொறிமுறையும் கல்வியமைச்சிடம் இல்லை என அண்மையில் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

2018 ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 469 மாணவர்கள் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளதுடன் 2019 ஆண்டில் அதன் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 223 ஆக அதிகரித்துள்ளது.

தனியார் துறை ஊடாக கல்வி கற்பதற்கு முனையும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அந்த மாணவர்களின் எதிர்காலத்திற்காக அவற்றின் சட்ட கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு பொறிமுறையினை வலுப்படுத்த வேண்டும் என மத்திய வங்கி தமது அண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய காலத்தில் 815 மத்ரசா மற்றும் அரபி கல்லூரிகள், 389 சர்வதேச பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை. அண்மைய காலத்தில்  815 மத்ரசா மற்றும் அரபி கல்லூரிகள்,  389 சர்வதேச பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை. Reviewed by Madawala News on September 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.