அசர்பைஜான் - அர்மீனியாவுக்கு இடையிலான யுத்தம்... இதுவரை 24 பேர் உயிரிழப்பு.


ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கு இடையே நடை பெறும்  யுத்தத்தில்  24 பேர் பலியானதாகவும்
100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாகோர்னோ - கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே சமீபகாலமாக மோதல்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அசர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்நிலையில், நாகோர்னோ - கராபாக் பகுதிக்கு அசர்பைஜான் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஆர்மீனிய படைகள் அசர்பைஜான் ராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் 23 பேர் பலியானதாகவும் 100 க்கும் மேற்பட்டோர் காயம அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1994 இல் போர் நிறுத்த உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், அசர்பைஜானும் ஆர்மீனியாவும் நாகோர்னோ - கராபாக் மற்றும் தனி அஜெரி - ஆர்மீனிய எல்லைப்புறங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினை அர்மீனிய பிரதமர் நிகோல் பஷ்னியன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார்.

அர்மீனியாவுக்கு ஆதரவாக ரஷியாவின் செயல்பாடுகள் உள்ளது. அதேபோல், அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கியின் செயல்பாடுகள் உள்ளது.

அசர்பைஜான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அர்மீனியாவுக்கு துருக்கி பகீரங்க எச்சரிக்கை விடுத்தது.

இதனால், அர்மீனியா - அசர்பைஜான் மோதல் சர்வதேச முக்கியத்துவம் பெரும் நிகழ்வாக மாறியுள்ளது. இந்த நாடுகள் வழியாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நகோர்னோ - கராபத் பகுதியில் நடைபெற்ற மோதல் மற்றும் போர் பதற்றத்தை தொடர்ந்து அர்மீனிய பிரதமர் நிகோல் பஷ்னியன் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என அர்மீனிய பிரதமரிடம் ரஷிய ஜனாதிபதி புதின் வலியுறுத்தியதாக ரஷிய ஜனாதிபதி மாளிகையான கிரிம்லின் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அர்மீனியாவின் பக்கமே ரஷியா இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அர்மீனியாவுக்கு ரஷியா ஆதரவு அளிக்கும் வகையில் அசர்பைஜானுக்கு ஆதரவாக உள்ள துருக்கிக்கு இது பெருத்த அடியாகவே இருக்கும்.

ஒருவேளை அர்மீனியாவுக்கும், அசர்பைஜானுக்கு இடையே போர் மூளூம் பட்சத்தில் ரஷிய படைகள் அர்மீனியாக்கு ஆதரவாக களமிறங்களாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அசர்பைஜான் - அர்மீனியாவுக்கு இடையிலான யுத்தம்... இதுவரை 24 பேர் உயிரிழப்பு. அசர்பைஜான் - அர்மீனியாவுக்கு இடையிலான யுத்தம்... இதுவரை 24 பேர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on September 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.