வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மீண்டும் தற்காலிக இடை நிறுத்தம்.



வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும்
 செயற்பாடுகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாளை (05) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மேலதிக செயலாளர், அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி துபாயிலுள்ள 660 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அதன் பின்னர், மாலைதீவு, அவுஸ்திரேலியா, கத்தார், ஓமான், பஹ்ரைன், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் கடமைகளில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோர் ஈடுபடவுள்ளதால் வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Siva Ramasami
வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மீண்டும் தற்காலிக இடை நிறுத்தம். வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மீண்டும் தற்காலிக இடை நிறுத்தம். Reviewed by Madawala News on August 04, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.