ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்குமாறு கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நபர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்குமாறு கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நபர்.


ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முன்னாள்
சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்க வேண்டும் என அந்த கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த கோரிக்கை தொடர்பில் கரு ஜயசூரிய இதுவரை எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியினாலும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற தெரிவு குறித்த தீர்மானம் மிக்க கலந்துரையாடல் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாட் பதீயுதின் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கிம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் கீழ் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள தேசிய பட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பது தொடர்பில் இன்றைய தினத்திற்குள் அறிவிக்கப்படும் என அந் கட்சியின் செயலாளர் லக்ஷ்மன் நிபுனாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் 19 தேசிய பட்டியல் உறுப்பினர்களது பெயர்கள் அதிவிசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்குமாறு கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நபர். ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற  உறுப்பினர் பதவியை ஏற்குமாறு கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நபர். Reviewed by Madawala News on August 11, 2020 Rating: 5