சபாநாயகராக மஹிந்த யாப்பா ? பிரதி சபாநாயகராக ஷசீந்திர



இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான முன்மொழிவொன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


அத்துடன், சபாநாயகர் நியமனம் குறித்து இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், முன்னதாக சபாநாயகராக கடமையாற்றிய சமல் ராஜபக்‌ஷ அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை,பிரதி சபாநாயகர் பதவிக்கு ஷசீந்திர ராஜபக்‌ஷ நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


சபாநாயகராக மஹிந்த யாப்பா ? பிரதி சபாநாயகராக ஷசீந்திர சபாநாயகராக மஹிந்த யாப்பா ? பிரதி சபாநாயகராக ஷசீந்திர Reviewed by Madawala News on August 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.