அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியது.2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், அதிகளவான
 தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வீவ்) தெரிவித்தது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் 3000க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் அரைவாசிக்கு அதிகமானவை (1800 முறைப்பாடுகள்) வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்தது.

தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியின் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர் ஆதில் அலி சப்ரி, வட மாகாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

சட்ட விரோத பரப்புரை நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், வாக்காளர்களை மத ரீதியான சுற்றுலாக்கள் அழைத்துச் செல்லல், கட்சியின் பெயர், இலக்கம் பொறிக்கப்பட்ட பத்திரங்களை விநியோகித்தல், தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளை மீறல், சட்ட விரோத வாகன பேரணிகள் போன்ற தேர்தல் சட்ட மீறல்கள் சம்பவங்கள் வட மாகாணத்தில் அதிகளவாகப் பதிவாகியுள்ளதாகவும் ஆதில் அலி சப்ரி தெரிவித்தார்.

அமைதிக் காலம் மற்றும் தேர்தல் தினத்திலும் பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ள சில கட்சிகளும் வேட்பாளர்களும் திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், பொலிஸார் பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்காத சில சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது. அவை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிட்டுள்ளோம். பிரஜைகளிடமிருந்தே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பிரஜைகள் முறைப்பாடுகளை மேற்கொள்வது நல்ல முன்னேற்றமாகும். தேர்தலின் போது பிரஜைகள் தன்னார்வ அடிப்படையில் முறைப்பாடுகள் மேற்கொள்வதை ஊக்குவிப்பதே வீவ் அமைப்பின் பிரதான நோக்கமாகும்.’

தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியானது (ஏஐநுறு) எப்ரியல் இளைஞர் வலையமைப்பு, இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், ஜனநாயகத்துக்கான இளைஞர் ஒன்றியம் மற்றும் ஜனநாயகத்துக்கான இளம் சட்டத்தரணிகள் ஒன்றியம் ஆகிய நான்கு அமைப்புகளின் கூட்டாக கட்டமைக்கப்பட்டதாகும்
அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியது. அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியது. Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5