ஜே.வி.பியின் தேசிய பட்டியல் வேட்பாளர், பேராசிரியர் கபில பெரேரா கல்வி அமைச்சின் புதிய செயலாளராக...


அமைச்சரவை செயலாளர் மற்றும் 25 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் (13)
நியமிக்கப்பட்டது அறிந்ததே.

இதில் நான்கு அமைச்சின் செயலாளர்களாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பேராசிரியர் கபில பெரேராவை கல்வி அமைச்சின் புதிய செயலாளராக ஜனாதிபதி  நியமித்தார்.

பேராசிரியர் கபில பெரேரா புதிய நியமனம் பெறுவதற்கு முன்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றியவர் .

 அதேவேளை  பேராசிரியர் கபில பெரேரா, 2015 பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனாவின் தேசிய பட்டியல் வேட்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏனையவர்கள்.
மேஜர் கமல் குணரத்ன – பாதுகாப்பு செயலாளர்.
அட்மிரல் ஜயநாத் கொலம்பகே – வெளிவிவகார செயலாளர்.
மேஜர் சஞ்சீவ முனசிங்க – சுகாதார செயலாளர்.
மேஜர் சுமேத பெரேரா – விவசாய செயலாளர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க – சுற்றுச்சூழல் செயலாளர்.
W. M. D. J.பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர்.
R. W. R.ரத்னசிறி – நிதி செயலாளர்.
எஸ்.ஆர்.ஆட்டிகல – பொது சேவைகள் செயலாளர்.
ஜகத் விஜேவீர – வெகுஜன ஊடக செயலாளர்.
ரவீந்திர ஹேவவித்தாரண – பெருந்தோட்ட செயலாளர்.
அநுர திஸாநாயக்க – நீர்பாசன செயலாளர்.
டபிள்யு.ஏ.சுலந்தன – தொழித்துறை செயலாளர்.
வசந்த பெரேரா – மின்சக்தி செயலாளர்.
எஸ்.ஹெட்டியாராச்சி – சுற்றுலா செயலாளர்.
ஆர்.ஏ.ஏ.கே.ரனவக்க – காணி செயலாளர்.
யு.கே.மப பத்திரண – தொழிலாளர் செயலாளர்.
ஐ.ரத்நாயக்க – மீன்பிடி செயலாளர்.
பி.ஹரிஸ்சந்திர – வனவிலங்கு செயலாளர்.
மொன்டி ரணதுங்க – போக்குவரத்து செயலாளர்.
பந்து விக்ரம – நீர்வழங்கல் செயலாளர்.
பி.ஜயவர்த்தன – வரத்தக செயலாளர்.
அநுராத விஜேகோன் – விளையாட்டு செயலாளர்.
ஆர்.ஒல்க – எரிசக்தி செயலாளர்.
பேராசிரியர் கபில பெரேரா – கல்வி செயலாளர்.
சிறிமல் பெரேரா – நகர அபிவிருத்தி செயலாளர்.


SHARE0
ஜே.வி.பியின் தேசிய பட்டியல் வேட்பாளர், பேராசிரியர் கபில பெரேரா கல்வி அமைச்சின் புதிய செயலாளராக... ஜே.வி.பியின் தேசிய பட்டியல் வேட்பாளர், பேராசிரியர் கபில பெரேரா கல்வி அமைச்சின் புதிய செயலாளராக... Reviewed by Madawala News on August 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.