இளைஞர்கள்பணத்துக்கு விலைபோனால் சமூக அரசியல் வெற்றியடையுமா ? அரசியல் வியாபாரம் இலாபமடையுமா?



எமது சமூகத்தில் அரசியல்மயப்படாத சில இளைஜர்கள் பணத்துக்காக
 மட்டும் அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதனை காணக்கூடியதாக உள்ளது. பணத்தை பெற்றுக்கொண்டு முகநூல்களில் சிலர் சமூகவிரோத அரசியல்வாதிக்காக புகழ் பாடுவதனை பார்க்கின்றபோது கவலை தருகின்றது.

எந்த வேட்பாளர் அதிகமாக பணம் வழங்குகின்றார்களோ அவ்வாறான அரசியல்வாதியின் பின்னணி பற்றி சிந்திக்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்குகின்ற கலாச்சாரம் எமது சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ளது. இவ்வாறான நிலை தொடரும் வரைக்கும் முஸ்லிம் சமூகத்திலிருந்து சிறந்த சமூக தலைமைகளை தெரிவு செய்வது கடினம்.  

இதிலிருந்து விடுபடுவதென்பது பாரியதொரு சவாலாகும். இதனால் எவர் அதிகமான பணத்தை அள்ளி வீசுகின்றார்களோ அவ்வாறானவர்களே சிறந்த அரசியல் தலைமைகளாக முன்னிலை வகிக்க முடியும்.

நாங்கள் ஆதரிக்கின்ற வேட்பாளர்கள் எமது சிறுபான்மை சமூகத்துக்கான பாராளுமன்ற அரசியலை முன்னெடுக்கக்கூடிய துணிச்சலும், ஆற்றலும், ஆளுமையும், அரசியல் அறிவும் இருக்கின்றதா ? பாராளுமன்றத்துக்கு தகுதியானவரா என்றெல்லாம் சிந்திப்பதற்கு தடையாக உள்ளது அவர்கள் வீசுகின்ற பணமாகும்.  

பணம் எங்களது அறிவுக்கண்ணை மறைத்துவிடுகின்றது. பணம் படைத்தவர்களில் ஒரு சிலரிடம் மட்டுமே சமூக உணர்வுகள் காணப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் இலாப நோக்கம்கொண்ட வியாபாரிகள்.

அதுபோல் பணமும் இல்லை, சமூக உணவுமில்லை. இந்த நிலையில் சமூக அரசியலை பயன்படுத்தி எப்படியாயினும் கோடி கோடியாக பணம் சம்பாதித்து பணக்காரனாக வேண்டுமென்ற நோக்கோடு சமூக உணர்வாளர்கள் போன்று காண்பிக்கின்ற பேராசைக்கார அரசியல்வாதிகளும் உள்ளார்கள்.

இலாப நோக்கம் கொண்ட பண முதலைகள் தங்களை சமூகவாதியாக வெளியே காட்டிக்கொண்டாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியலை இந்திய சினிமா போன்று ஒரு பெரும் வர்த்தகமாகவே கருதுகின்றார்கள்.  

இதனை விளங்கிக்கொள்ளாத நாங்கள், அவ்வாறானவர்களை சமூகத்தின் காவலர்களாகவும், தியாகிகளாகவும், அவர்கள் மூலமாக உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நம்புவது முட்டாள்தனமாகும்.  

வாங்குகின்ற கூலிக்கு முகநூல்களில் எதையாவது எழுதி அவர்களை புகழ்ந்து குறிப்பிட்ட அரசியல்வாதிகளை திருப்தி படுத்தினால் போதும் என்ற நோக்குடையவர்கள் இருக்கும் வரைக்கும் அரசியல் வர்த்தகம் செய்பவர்கள் தங்களது வர்த்தகத்தில் வெற்றியடைவார்கள். ஆனால் இதில் தோல்வியடைவது எமது முஸ்லிம் சமூகம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இளைஞர்கள்பணத்துக்கு விலைபோனால் சமூக அரசியல் வெற்றியடையுமா ? அரசியல் வியாபாரம் இலாபமடையுமா? இளைஞர்கள்பணத்துக்கு விலைபோனால் சமூக அரசியல் வெற்றியடையுமா ? அரசியல் வியாபாரம் இலாபமடையுமா?  Reviewed by Madawala News on August 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.