பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காலப்பகுதிக்குள் முஸ்லிம்கள் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும்



ஐ. ஏ. காதிர் கான்

பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரப் பரப்புரைகள், (02) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் நிலையில், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள்ளும் அதற்குப் பின்னரும் முஸ்லிம்கள் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்துகொள்ளுமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 


பாராளுமன்றத் தேர்தல் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், முஸ்லிம்கள் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்துகொள்ள வேண்டும். இக்காலப் பகுதிக்குள் ஒருவருக்கொருவர் வீண் பிரச்சினைகளில் ஈடுபடாமல், மிகவும் அன்னியோன்யமாக ஐக்கியமாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சக வாழ்வு ஒற்றுமையைப் பேணி நடந்து கொள்வது மிகவும் சிறப்புக்குரியது. 


இக்காலப் பகுதியில் கட்சி வேறுபாடுகளை மறந்து, எல்லோரும் இலங்கை வாழ் மக்கள் என்ற ரீதியில் சமூக உணர்வுடன்  ஒற்றுமையைப் பேணி நடந்து கொள்வதே, முஸ்லிம்களாகிய எமக்கு சிறப்பாகும்.


பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வி ஏற்படுவது என்பது சகஜம். இதற்காக நாம் ஒருவருக்கொருவர் குரோதம் பாராட்டிக்கொண்டிருக்கக் கூடாது.அத்துடன் இதை நாம்  பொருட்படுத்தவும் கூடாது.வெற்றி தோல்வி என்பது, எல்லோரினது வாழ்விலும் ஏற்படுவதுதான். வெற்றி பெற்றால் சந்தோஷம் அடையும் நாம், தோல்வி அடைந்தால் அதற்காகக் கவலைப்படவும் கூடாது. தற்போது வெற்றி பெறாவிட்டாலும், அது எப்போதோ ஒருநாள் நம்மை வெற்றியின்பால் அழைத்துச் செல்லும் என்பதை எண்ணி மகிழ வேண்டும். இதை நம்பி எமது வாழ்வை ஓட்டிச் செல்வதும், மிகப் பொறுமையாக இருப்பதுமே இன்றைய காலத்தின் தேவையாகும். 

   

எனவே, எஞ்சியுள்ள ஓரிரு நாட்களில் பொறுமை காப்போம். நிதானமாக நடந்துகொள்வோம். வைரம், குரோதம் என எதையும் சிந்திக்காமல், ஐக்கியமாகவும் பண்பாகவும் அடுத்தவருக்கு முன்மாதிரியாக நடப்போம். உண்மையான முஸ்லிம்களாக நடந்துகொள்வோம்.

பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காலப்பகுதிக்குள் முஸ்லிம்கள் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காலப்பகுதிக்குள் முஸ்லிம்கள் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும் Reviewed by Madawala News on August 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.