VIDEO இணைப்பு : ஹொரனவில் இடிந்து விழும் 3 வர்த்தக நிலையங்கள்...


ஹொரன -  அங்குருவாதொட்ட  வீதி  அகலப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது, ​​
அருகிலுள்ள மூன்று வணிக வளாகங்கள் இன்று தரையில் இடிந்து விழுந்ததாக  ஹொரான மேயர் விதாரமகே சிறிசோம தெரிவித்தார்,
                                   
வீதி  மேம்பாட்டு ஆணையத்தின் ஹொரான நிர்வாக பொறியாளர் அலுவலகத்தின் மேற்பார்வையில் இந்த அபிவிருத்தி  பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டபட்டுள்ள   100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பாதணிகள்  மற்றும் செருப்பை விற்கும் மூன்று கடைகள் இதனால் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
                                                                                                   
உடைந்து விழுந்த நேரத்தில்  கடைகளில் ஊழியர்கள்  மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்தனர், உடைந்த நேரத்தில்  அவர்கள் அனைவரும் வணிக வளாகத்திலிருந்து வெளியேரியதால் பாரிய ஆபத்தில் இருந்து தப்பினர்.

ஹொரானவில் அதிக போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையில் வீதி  அகலப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாக மேயர் சிரிசோமா தெரிவித்தார்.

 ஹொரான நகராட்சிமன்ற தீயணைப்பு வீரர்கள் தங்கள்  இடிபாடுகளில் இருந்து பொருட்களை  மீட்டெடுக்க உதவுகிறார்கள் என்று மேயர் மேலும்  கூறினார்.
 
VIDEO இணைப்பு : ஹொரனவில் இடிந்து விழும் 3 வர்த்தக நிலையங்கள்... VIDEO இணைப்பு : ஹொரனவில் இடிந்து விழும் 3 வர்த்தக நிலையங்கள்... Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.