எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களாலும் செய்ய முடியாத ஒரு சாதனையை முதலமைச்சராக இருந்த காலத்தில் பிரசன்ன ரணதுங்க அவர்கள் செய்து காட்டியுள்ளார்.




நிருபர் :- பௌசுல் அலீம்
கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு நல்ல பிரதிநிதியோருவரை இல்லாமல்
செய்வதற்காக திட்டமிடப்பட்ட வகையில் வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நபர்களும், பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்களும் இம்முறை தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.

இவ்வாறான போலி அரசியல்வாதிகள் தொடர்பில் கம்பஹா வாழ் தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என மினுவாங்கொட கல்வி அபிவிருத்திக்குழு பிரதித் தலைவரும் , முன்னாள்  பிரதேச சபை உறுப்பினர் எம். சுஹைதர் தெரிவித்தார்.

இலங்கை பொதுஜன பெரமுனவின் மினுவாங்கொடையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

ஜனநாயக சமூகமொன்றில் மிகமுக்கியமான நிகழ்வாக தேர்தல்கள் நோக்கப்படுகின்றன. கம்பஹா முஸ்லிம்கள் அனைவரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதை அதி கூடியவகையில் வாக்களிப்பது அவசிய மாகும். முஸ்லிம் மக்கள் தேர்தல்களின் போது போலியான பிரதிநிதிகளுக்கு அதிகம் வாக்களிக்கின்றனர். பின்னர் ஏமாந்து போகின்றனர். எமது வாக்குகள் கொள்ளையிடப்படுவதை முஸ்லிம்கள் உணர்வதில்லை.

 முஸ்லிம்கள் எப்போதும் நாட்டு நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றவர்கள் , அந்தவகையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலிலும் நாம் நாட்டு நலன்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கடப்பாடாகும்.

பிரசன்ன ரணதுங்கவுக்க  கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். எதற்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேள்வி முன் வைப்பவர்களுக்கு நான் கூற விரும்புகின்ற விடயம் இப்போதும் உங்கள் கண் முன்னே காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றது.

1993 ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியல் பயணத்தை பிரசன்ன ரணதுங்க ஆரம்பித்தார். சந்திரிக்க அம்மையாரும் அதே வருடம் மாகாண சபை முதலமைச்சர் ஆனார். பிரசன்ன ரணதுங்க அவர்கள் மாகாண சபை சுகாதார அமைச்சராக பொறுப்பேற்று பல சேவைகள் புரிந்து படிப்படியாக மக்கள் மனதில் இடம் பிடித்து மேல் மாகாண முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

 சுகாதார அமைச்சராக இருந்தபோது கம்பஹா மாவட்ட முஸ்லிம்களுக்கு பல சேவைகளை செய்தவர். 2010 ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச அவர்களிடம் நிதி பெற்று கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களின் பாதைகளையும் செப்பனிட்டு, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்தார். 
மினுவாங்கொட, கல்லொழுவை பாடசாலைக்கு மூன்று மாடிக் கட்டிடம் வழங்கியது மட்டும் அல்லாமல் மாவட்ட ஏனய முஸ்ஸலிம் பாடசாலைகளுக்கும் கட்டிடங்களை வழங்கினார்.  முஸ்லிம் பாடசாலைகளின்  மைதானங்கள் அமைக்க துணை நின்று தேவைகளை முழுமையாக நிவர்த்தி செய்து கொடுத்தார்.  சகல மத தகம் பாடசாலைக்கு உதவும் திட்டத்தில் முஸ்லிம் அகதியா பாடசாலைகளுக்கும் நிதி வழங்கிய இனம்,கட்சி பேதமின்றி தன்னலமற்ற அவரது சேவையாகும். 

எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களாலும் செய்யமுடியாத ஒரு சாதனையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேல் மாகானத்தில் அமைந்திருக்கும் முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க சரித்திரத்தில் எவரும் செய்யாதளவு நியமணங்களை கொடுத்தவர். 

பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேல் மாகாண முதலமைச்சராக இருந்த போதில் மேல் மாகாண முஸ்லிம்களின் கற்றல்-கற்பித்தல் விடயங்களில் கூடிய கவனம் செலுத்தியவர் என்பதே கம்பஹா மக்கள் அறிந்த உண்மை. என மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களாலும் செய்ய முடியாத ஒரு சாதனையை முதலமைச்சராக இருந்த காலத்தில் பிரசன்ன ரணதுங்க அவர்கள் செய்து காட்டியுள்ளார். எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களாலும் செய்ய முடியாத ஒரு சாதனையை முதலமைச்சராக இருந்த காலத்தில் பிரசன்ன ரணதுங்க அவர்கள் செய்து காட்டியுள்ளார். Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.