அமீர் அலியை வெற்றி பெறச்செய்யுங்கள் எனது அரசாங்கத்தில் அவரை அதிகாரமிக்க அமைச்சர் ஆக்குவேன்.



கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மட்டகக்ளப்பு மாவட்டம் 
முழுவதுமாக வாக்களித்து எவ்வாறு சஜித் பிரேமதாஸவை பலப்படுத்தினீர்களோ அதை விடவும் அதிகமாக டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்துமாறு சஜித் பிரேமதாஸ ஓட்டமாவடியில் தெரிவித்தார்.


கடந்த காலத்தில் சஜித் பிரேமதாஸவை முழுவதுமாக ஆதரித்த மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட மக்களுக்கு நன்றிக்கடனாக வர இருக்கின்ற பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெறப்போகும் முதன்மை வேட்பாளர் அமீர் அலிக்கு நிச்சயமாக அதிகாரமிக்க அமைச்சு பதவியை வழங்குவேன் எனவும் இதன்போது தெரிவித்தார்.

ஆட்சி அமைத்த பிற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1240 கிராமங்களிலும் கிராம எழுச்சி மற்றும் நகர இராச்சியம் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் முதல் கட்டமாக கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாரிய தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும் எனவும் அவை 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் விஷ்தரிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமாக விஸ்தரிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட அனைத்து இளைஞர் யுவதிகளும் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் எனவும் இதன்போது வாக்குறுதியளித்தார்.


மூன்று தேர்தல் தொகுதிகளுக்குள்ளும் தனித்தனியான அபிவிருத்தி சங்கக்களும் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் இதன்போது தெரிவித்தார்.

ஆட்சி அமைத்த பிற்பாடு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை நவீன மயப்படுத்துகின்ற திட்டமும் விவசாய சமூகத்திற்காக பாரிய நெற்களஞ்சியசாலை உருவாக்கப்படுவதுடன் விளால் ஓடை மற்றும் மூக்குரன் ஓடை விவசாய சமூகம் எதிர்நோக்கியுள்ள பிர்ச்சினைகளுக்கான சகல விதமான தீர்வுகளும் சஜித் பிரேமதாஸவின் நேரடி கண்காணிப்பின் கீழ் தீர்வுகள் தரப்படும் எனவும் வாக்குறுதி வழங்கினார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அமீர் விளையாட்டு அரங்கினை மக்களால் பூரணப்படுத்திய அந்த நிகழ்வை எப்போதும் நன்றிக்கடனாக பார்ப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.

2025 ம் ஆண்டு வருகிறபோது இந்த மாவட்டத்தில் வீடு இல்லை என்கிற சத்தம் இருக்க கூடாது என்பது தனது அவா எனவும் குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ கடந்த காலத்தில் 200 ற்கு மேற்பட்ட வீட்டுத்திட்டங்கள் வாயிலாக 5000 வீடுகள் நிர்மாணிக்க்பட்டிருப்பதையும் நினைவுக்கு கொண்டு வந்தார்.

இம்முறை வெற்றியின் பின்னர் அலரி மாளிகையில் இருந்து கொண்டு செயற்படாமல் மக்களோடு மக்களாக சேவை செய்பவனாகவே சஜித் பிரேமதாஸவை பார்ப்பீர்கள் எனவும் இதன்போது தெரிவித்தார்.கடந்த காலத்தில் கொவிட் 19 தாக்கத்தின் பிற்பாடு முஸ்லிம் சமூகத்தின் மீது அபாண்டமாக பலி சுமத்தியதையும் இதன்போது சஜித் பிரேமதாஸ வன்மையாக கண்டித்தார். மற்ற கட்சிகள் போல் இல்லாமல் வெறும் வாய் சாடலுக்கு உட்பட்டவன் அல்ல சஜித் பிரேமதாஸ என்பதை மக்கள் கடந்த காலத்திலும் அறிந்திருப்பீர்கள் எனவும் இதன்போது தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸ நூறு வீதம் பௌத்த கோட்பாட்டை பின்பற்றுபவன் எனவும் புத்த பெருமான் ஒருபோதும் பிரித்தாளும் கொள்கையையோ இனவாதத்தையோ போதிக்கவில்லை எனவும் அச்சமில்லாத சமூகமாக ஒவ்வொரு இலங்கையனும் வருங்காலத்தில் வாழ ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அமீர் அலியை வெற்றி பெறச்செய்யுங்கள் எனது அரசாங்கத்தில் அவரை அதிகாரமிக்க அமைச்சர் ஆக்குவேன். அமீர் அலியை வெற்றி பெறச்செய்யுங்கள் எனது அரசாங்கத்தில் அவரை அதிகாரமிக்க அமைச்சர் ஆக்குவேன். Reviewed by Madawala News on July 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.