ஆட்ட நிர்ணய சதி விவாகாரம்.. நாளை குமார் சங்கக்கார வாக்குமூலம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஆட்ட நிர்ணய சதி விவாகாரம்.. நாளை குமார் சங்கக்கார வாக்குமூலம்.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் விசாரணைக் குழுவில், நாளை (02) முன்னிலையாகவுள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியின் போது இடம்பெற்றதாக கூறப்பட்ட ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் நாளை விசாரணைக் குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

குறித்த ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் இவரையில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் உபுல் தரங்க ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thamilan lk
ஆட்ட நிர்ணய சதி விவாகாரம்.. நாளை குமார் சங்கக்கார வாக்குமூலம். ஆட்ட நிர்ணய சதி விவாகாரம்.. நாளை குமார் சங்கக்கார வாக்குமூலம். Reviewed by Madawala News on July 01, 2020 Rating: 5