PHOTOS : எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி நூறு ஆசனங்களாவது பெறக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக உள்ளது.


எஸ்.எம்.எம்.முர்ஷித்.

எதிர்வரும் பாராளுமன்றத்தில்; ஐக்கிய மக்கள் சக்தி நூறு ஆசனங்களாவது பெறக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

PHOTOS : https://www.facebook.com/MadawalaNewsWeb/posts/3170456879707289

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் ஹபீப் றிபானின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு மற்றும் அவரை ஆதரித்து வியாழக்கிழமை இரவு வாழைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.



அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-



நாங்கள் புதிய அரசியல் உருவெடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியில் ஆளும் கட்சியில் இருந்து அதிக பெரும்பான்மையானோர் எங்களது கட்சியில் இணைந்துள்ளனர். அதனோடு இணைந்து அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒன்று சேர இருக்கின்ற மிகப்பெரிய இயக்கம்.



ஐக்கிய மக்கள் சக்தியில் கல்குடாப் பிரதேசத்தில் போட்டியிடுபவருக்கு வெற்றி கிடையாது. அதைப்பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட முடியாது. நான் கண்டியில் இந்த கட்சியில் கேட்டாலும் இங்கு நாங்கள் இந்த கட்சிக்கு வாக்கு கேட்டு வரவில்லை.



பாராளுமன்றத்தில் கட்சி என்ற அந்தஸ்த்தை தூக்கி பிடிக்கின்ற ஒரேயொரு அடையாளம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாங்கள் பெறுகின்ற ஆசனம். தலைவர் பெறும் ஆசனத்தினை விட மட்டக்களப்பில் மரத்தில் வெற்றி பெறும் ஆசனம் தான் தலைவருக்கு மதிப்பையும், மரியாதையும் தரும் என்பதை மறந்து விட முடியாது.



யாரிடம் கேட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆசனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள். கல்குடாத் தொகுதியில் ஒரு ஆசனத்தினை பெறலாம் என்ற உற்சாகம் வேண்டும். எங்களுடைய கட்சி நிறத்தில் பலர் பிரச்சாரம் நடாத்துகின்றனர். கண்டியிலும் பார்த்தால் பச்சை, மஞ்சள். ஏன் கொழும்பிலும் அதே நிலைமைதான் சஜித் பிரேமதாச பச்சை, மஞ்சள் சால்வை தொப்பி அணிந்து செல்கின்றார். அவர்களுக்கு தெரியாது நமது கட்சி நிறம்; என்று. நாமும் அதில் உள்ளதால் எதுவும் செய்யவில்லை. இல்லையெனில் வழக்கு போட முடியும். இதனால் நாடு முழுவதும் இருப்பதால் சந்தோசமாக உள்ளது.



எதிர்வரும் பாராளுமன்றத்தில் பச்சை, மஞ்சள் நிறத்திலான ஐக்கிய மக்கள் சக்தி நூறு ஆசனங்களாவது பெறக்கூடிய வாய்ப்பு நிச்சியமாக உள்ளது என்பது எங்களுக்கு பெரிய சந்தோசம். எமது கட்சி நாடு தழுவிய ரீதியில் பலமாக இயக்கமாகும். நாங்கள் ஆளும் கட்சி, எதிர்கட்சியில் இருந்தாலும் முஸ்லிம்கள் ஆளும் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் என்பதை இந்த தேர்தல் உறுதி செய்யும்.



இப்போதுள்ள ஜனாதிபதி அதிகாரம் குறைந்த ஜனாதிபதி, பாராளுமன்றம் இல்லாதமையால் தற்போது அதிகாரம் உள்ளது போன்று இருக்கின்றார். அடுத்த முறை அமையவுள்ள பாராளுமன்றம் ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரங்கள் சமநிலையில் கொண்ட ஒரு பாராளுமன்றம். இதற்கு முன்னர் இருந்த பாராளுமன்றம் போன்று அல்ல. ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வைத்துக் கொள்ள முடியாது. திரைமறைவில் அமைச்சுப் பதவியை வைப்பதாக பார்வை கொடுத்தாலும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை கட்டுப்படுத்துகின்ற நிலைமைக்கு கொண்டு வரும்.



ஒரு வித்தியாசமான அரசியல் சூழலை பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எதிர்பாரக்க முடியும். அண்ணன் தம்பிமார் கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். இவர்களுக்குள்ளும் பிரச்சனை வரலாம். நாங்கள் எல்லா இலக்கையும் அடையவில்லை என்றாலும் பாராளுமன்ற அதிகாரங்களை கூட்டியுள்ளோம். அதிகாரங்களை கூட்டிய ஒரு புதிய பாராளுமன்றத்தில் இம்மண்ணில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியை அனுப்புங்கள் என்றார்.



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் ஹபீப் றிபான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்;.ஜெமில், கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் எச்.எம்.எம்.றியாழ், முஸ்லிம் காங்கிரஸின் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



இதன்போது பாராளுமன்ற வேட்பாளர் ஹபீப் றிபானின் தேர்தல் விஞ்ஞாபன முதல் பிரதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
PHOTOS : எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி நூறு ஆசனங்களாவது பெறக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக உள்ளது. PHOTOS :  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தி நூறு ஆசனங்களாவது பெறக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக உள்ளது. Reviewed by Madawala News on July 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.