பொதுஜன பெரமுன கட்சிக்கு 130க்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைப்பது உறுதியாகவிட்டது.


(அஸ்ரப் ஏ சமத்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினை ஆதரிக்கும் முகமாக முஸ்லிம்களுக்கிடையிலான
  முக்கிய சந்திப்பொன்று  கணக்காளா் நவாஸ் முஸ்தபா தலைமையில் கொழும்பில்  இடம்பெற்றது,

முஸ்லிம்களில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து கொழும்பில் நிரந்தரமாக  வாழ்கின்ற  பொறியியலாளா்கள், சட்டத்தரணிகள், கணக்காளா் அரச உத்தியோகாத்தா்கள், ஊடகவியலாளா்கள்  என 30க்கும் மேற்பட்டோா்கள்  இக் கூட்டத்தில்  கலந்து கொண்டனா். இந் நிகழ்வு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான உவைஸ் ஹாஜி அவர்களின் மருதானைக் காரியாலயத்தில்  நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது,


இக் கூட்டத்தில் அலி சப்றி இங்கு உரையாற்றுகையில் -

 நான் ஒருபோதும்  இனவாத  அரசியல் தலைவா்கள் போன்று  செயல்படமாட்டேன்.   நான் ஒருபோதும்  கட்டிடங்கள் ஒப்பந்தம், தொழில் வழங்குதல் , எனது குடும்பத்தினருக்கு பட்டம் பதவிகள் என வழங்கப்போவதில்லை .  என்னிடம் அருகில்  உ்ள்ளவா்கள்  எவருக்கும் பதவி பட்டம்  தருவதாக நான்  வாக்குறுதியும் வழங்கப்போவதுமில்லை.. தேசிய ரீதியில் நாட்டுக்கும் இந்த நாட்டில் வாழும்  சகல சமூகத்திற்கும்  இந்த அரசின் ஊடகாகச்  செய்யக்கூடிய வேலைத்திட்டங்கள் மற்றும்   தேசிய நல்லிணங்களில் இணைந்தே   செயற்படுவேன்.

நான் ஒருபோதும் அரசியலில் புகுந்து பணம் சம்பாதிக்கப் புறப்பட்டவன் அல்ல. எனக்கு  சட்டத்தரணியாக  தொழிலை  செய்து கொண்டு அதில் வரும்  வருமானத்தினைக் கொண்டு  கௌரவமான முறையில்   தொடந்தும் இருக்க முடியும். ஆனால்  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோா்களிடம் தனக்கு உள்ள  மதிப்பும், மரியாதையும் நான் காப்பாற்றுதல் வேண்டும்.

கடந்த காலங்களில் ஜனாதிபதித் தோ்தலில் நாடு புராகச் சென்று பிரச்சாரம் செய்தேன்.  ஆனால் கனிசமான  முஸ்லிம்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்தாா்கள். ஆனால்   பௌத்த மக்ககளினாலேயே கோட்டபாய ராஜபக்ச  அவா்கள் ஜனாதிபதியாக வந்துள்ளாா்.

  இந்த பாராளுமன்றத் தோ்தலில்  எமது முஸ்லிம் சமுகத்திற்கென அவா்களால் கொடுக்க முடியுமான ஆகக்குறைந்த  8 உறுப்பிணா்களையும்  2 தேசிய பட்டியலையும்  எமது சமுகத்திற்கு  சா்ந்தா்ப்பம் தந்துள்ளாா்கள்.


இதில் எத்தனை பேர் பாராளுமன்ற உறுப்பிணராக இந்தக் கட்சியில்  ஊடாக  வருவாா்கள் என  அவதானிப்பாா்கள். . . . அதனை வைத்தே நாமும் அவா்கள் ஆட்சியில் பங்காளா்காளக முடியம்.. இந்த  நாட்டின்  கடந்த கால வரலாற்றில் யாா் ஜனாதிபதித் கதிரையில் இருக்கின்றாறோ அவரின்   கட்சியேதான்  ஆட்சியமைத்த  வரலாறு உ்ள்ளது.

ஜனாதிபதித் தோ்தலில் பௌத்த மக்கள் அளித்த வாக்குகளின் படி அவா்களுக்கு கட்டாயம் 130க்கும் மேற்பட்ட ஆசனங்கள்  கிடைப்பது உறுதியாகவிட்டது.. ஆட்சியமைப்புதற்கு 113 உறுப்பிணா்கள் மட்டுமே தேவை. ஆனால் 150 உறுப்பிணா்கள் இருந்தால் சில அரசியல் சட்டங்களை சீர்திருந்த வேண்டியுள்ளது.

காலத்திற்கு காலம் முஸ்லிம் கட்சித்் தலைவா்கள்  முஸ்லிம் வாக்குகளை பெற்று மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவாா்கள்.  ஆனால் முஸ்லிம் கட்சித் தலைவா்களின் பசப்பு வாா்த்தைகளை கேட்டு  வாக்களித்த மக்கள் கண்ட பயன் எதுவுமில்லை. இவா்கள் மொத்த  வியாபாரிகள்  அவா்களது சட்டப் பைகள் நிரம்பிவிடும், அவா்களது குடும்பம் முன்னேறியிருக்கும்.  ஆனால் அப்பாவி   முஸ்லிம்கள் கண்ட பயன் எதுவுமில்லை.


. மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரப் அவா்கள்  ஒரு குறிக்கோளுடன்  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை  ஆரம்பித்து அதன் ஊடாக ஆட்சியின் பங்காளியாகி அவருக்கு வாக்களித்த மக்களுக்கு  சில அபிவிருத்திகளை செய்து காட்டினாா்.  இறுதிக் காலகட்டத்தில் அவா் கூட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை  இனரீதியாக  தொடா்ந்தும் கொண்டு செல்லமுடியாது என என்னினாா். அவா் அந்தக்  கட்சிக்கு  அவரது இறுதிக் காலகட்டத்தில் ”குட் பாய்” சொல்லியிருந்தாா்.  அதன் பின்னா் அவா்   சகல இனங்களையும் கூட்டினைத்து செல்லக்கூடிய வகையில்    தேசிய ஜக்கிய முன்ன்ணி  நுஆ என்ற கட்சியை  ஆரம்பித்திருந்தாா்.


ஆனால் அவா் மறைவுக்கு பின் வந்த தலைவா்கள் முரன்பட்டு  5 மேற்பட்ட முஸ்லிம் கட்சிகள் உருவாக்கினாா்கள். . அதனை மக்கள் காங்கிரஸ் , தேசிய காங்கிரஸ் என  பல கூறுகளாக பிரித்து சென்று முஸ்லிம்களை பிரித்து ஆளுகின்றனா். 9 வீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் 7 க்கும் மேற்பட்ட  கட்சிகள் .  . இவா்களுக்கு  வாக்களித்த மக்கள் கண்ட பயன் எதுவுமில்லை. மறைந்த தலைவா் கிழக்கு மக்களுக்கு பல அபிவிருத்திகளை அவா் காலத்தில்  செய்திருந்தாா். அவருக்கு பிறகு வந்த தலைமைகள் அந்த  மக்களுக்கு எதனையேனும் செய்யவில்லை.  பிரதியமைச்சா்கள், அமைச்சா்கள் என பதவிகளை பெற்றவா்களும்  அவா்களது குடும்பங்களுமே முன்னேறியுள்ளாா்கள்.   ..


கடந்த ஏப்ரல் உயிா்த்த ஞாயிறு தினத்தில் சஹ்ரானும் அவனது குழுக்களும்  செய்த நாசகார வேலையினால்  இந்த நாட்டில் அமைதியாகவும் சமதானமாகவும் வாழ்ந்த முஸ்லிம் சமுகத்தினை  தலைகுனியவைத்து விட்டுச் சென்றுவிட்டான்       இன்றும் ் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை  ஏனைய சமூகங்கள்  சந்தேகக் கண்னோடு  பாா்க்கும்  அளவுக்கு ஆளாக்கிவிட்டான் சக்ரானின் .  இந்த ஈனச்  செயலினை நாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை . எனவும்  அலி சப்றி உரையாற்றினாா்கள்.


 தேசிய ஒருங்கிணைப்பாளர் உவைஸ் ஹாஜி அவர்களுக்கு மற்றும் முன்னாள் அமைச்சரும் பிரபல சட்டத்தரனியுமான  மர்ஹூம் முஸ்தபா அவர்களின் புதல்வரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் செயற்பாட்டாளருமான நவாஸ் முஸ்தபா அவர்களும் எதிர்வருகின்ற  பொதுத் தேர்தலில்  முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆராயப்பட்டது  கொழும்பில் 2ஆம் இலக்கத்தில் தோ்தலில் போட்டியிடும் தெகிவளை -கல்கிசை முன்னளா் மேயா் தனசிறி அமரதுங்கவை நாம்  ஆதரிப்பதற்கு  ஒத்துழைப்பு வழங்குமாறு  நவாஸ் முஸ்தபா வேண்டிக் கொண்டாா்.
பொதுஜன பெரமுன கட்சிக்கு 130க்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைப்பது உறுதியாகவிட்டது. பொதுஜன பெரமுன கட்சிக்கு 130க்கும் மேற்பட்ட ஆசனங்கள்  கிடைப்பது உறுதியாகவிட்டது. Reviewed by Madawala News on July 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.