VIDEO : குழந்தையிடம் கவிதையினை எழுதிக்கொடுத்து அரசியல் பிரச்சார மேடையில் ஏற்றுவது எந்த விதத்தில் நியாயம்.?


 - ஓட்டமாவடி அஹ்மத் இர்ஷாத் -
கல்குடாவின் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மாவட்ட பதில் நீதவானுமான ஹபீப் றிபான்
தனது அரசியல் பிரச்சார மேடையில் குழந்தையிடம் கவிதையினை எழுதிக்கொடுத்து அதனை பேச வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வது எந்த விதத்தில் நியாயம் என பல கோணத்தில் பலராலும் அலசப்படும் விடயமாக மாறியுள்ளது.

சட்டத்தரணியாகவும், முன்னாள் மாவட்ட பதில் நீதவானானுமாக கடமையாற்றிய ஹபீப் றிபான் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேசத்தில் உள்ள முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்கள் இருக்க தக்க இவ்வாறு ஒன்றுமறியாத குழந்தையினை தனது பிரச்சார மேடைக்கு கொண்டு வந்து கவிதைபாட வைத்திருப்பதும், அதனை அவருடைய உத்தியோக பூர்வ முக நூலில் பதிவேற்றம் செய்திருப்பதும் நாட்டினுடைய தேர்தல் சட்டதிட்டங்கள் மீறப்பட்டிருப்பது என்பது அற்பால் சிறுவர் துஸ்பிரயோகம் என்ற வாதபிரதிவாதங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


ஆகவே வேட்பாளரும் முன்னாள் பதில் நீதவானுமான ஹபீப் றிபான் எதிர்காலத்தில் பாராளுமன்ற கதிரையில் அல்லது அரசியல் அதிகாரத்தில் உட்காருமிடத்து எவ்வாறு கல்குடா இளைஞர்களை வழி நடாத்தப்போகின்றார்.? அல்லது சிறுவர் துஸ்பிரயோக விடயங்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதில் அவருடைய முஸ்தீபுகள் எவ்வாறு அமையும் என்பது சம்பந்தமாகவும் பிரதேசத்தில் பரவலாக அலசப்பட்டு வருகின்றது.

எதுவானாலும் அரசியல் மேடையில் சிறுவர் என்பதற்கு அப்பால் ஒன்றுமே அறியாத குழந்தையிடம் தன்னை பற்றிய கவிதையினை எழுதிக்கொடுத்து அதனை தனது தேர்தல் பிரச்சார மேடையில் தனக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக சட்டத்தினை முழுமையாக கற்றறிந்த வேட்பாளர் றிபான் பயன்படுத்தியிருப்பது நாகரீகமற்ற செயல் என்பதற்கு அப்பால், படித்த மற்றும் சமூக அமைப்புக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்பதே உண்மை.
VIDEO : குழந்தையிடம் கவிதையினை எழுதிக்கொடுத்து அரசியல் பிரச்சார மேடையில் ஏற்றுவது எந்த விதத்தில் நியாயம்.? VIDEO : குழந்தையிடம் கவிதையினை எழுதிக்கொடுத்து அரசியல் பிரச்சார மேடையில் ஏற்றுவது எந்த விதத்தில் நியாயம்.? Reviewed by Madawala News on June 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.