இலங்கை இஸ்லாமிய ஆசிரியர சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எம்.அனஸ் அவர்களின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.


(எஸ்.அஷ்ரப்கான்)
இரு தசாப்தங்களுக்கு மேலாக இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தைப் பிரபல்யப்படுத்துவதில்
தம்மை அர்ப்பணித்த முன்னாள் தலைவரின் திடீர் மறைவால் சங்க அங்கத்துவர்கள் பெருங் துயருறுவதாக இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எம்.அனஸ் நேற்று முன்(சனி) மூதூரில் மரணமானார்.

அன்னாரின் மறைவையொட்டி சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸாஇ பொதுச் செயலாளர் எம்.கே.எம்.நியார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த இருபது வருடங்களாக இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்து இனஇ மத பேதங்களுக்கு அப்பால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் முழு நேர பங்காளியாக ஈடுபட்டார்.


எல்லா விடயங்களையும் தாமே முன்னெடுத்துச் செய்யும் ஆர்வமுடையவரான முன்னாள் தலைவர் தம்மால் இயன்ற பணிகளை சங்கத்தினூடாக மேற்கொண்டார்.

ஆசிரியராக, ஊடகவியலாளராக எனப் பல தளங்களில் இயங்கியதால் சங்கத்தின் நடவடிக்கைகளைப் பிரபல்யப்படுத்துவதில் தடையில்லாமல் செயற்பட்டார்.

அரசாங்க சுற்றுநிருபங்கள், தாபன விதிக்கோவைகள் உள்ளிட்டவைகளை அறிவதிலும் செயற்படுத்துவதிலும் நிகரற்றவராகத் திகழ்ந்த முன்னாள் தலைவரின் இழப்பு சங்கத்தின் வரலாற்றில் முக்கியமான தடமாகும்.


சங்க முன்னெடுப்புக்களின் போது ஏற்பட்ட தவறுகளை மறந்து அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பது சங்க அங்கத்துவர்களின் தலையாய கடமையாகும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எம்.அனஸ் அவர்களின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம். இலங்கை இஸ்லாமிய ஆசிரியர சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எம்.அனஸ் அவர்களின்  மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம். Reviewed by Madawala News on June 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.