காப்புறுதி நிறுவன அதிகாரிகள் போன்று வேடமிட்டு கம்பளையை மையப்படுத்தி மலையகத்தின் பல பிரதேசங்களில் ஹெரோயின் விநியோகம். 2 பேர் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

காப்புறுதி நிறுவன அதிகாரிகள் போன்று வேடமிட்டு கம்பளையை மையப்படுத்தி மலையகத்தின் பல பிரதேசங்களில் ஹெரோயின் விநியோகம். 2 பேர் கைது.


காப்புறுதி நிறுவன அதிகாரிகள் போன்று வேடமிட்டு கம்பளையை மையப்படுத்தி மலையகத்தின்
பல பிரதேசங்களில் ஹெரோயின் விநியோகித்து வந்தார்கள் எனச் சந்தேகிக்கும் இருவரை கைது செய்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்

பிரபல பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாவான சங்கவினால் சிறைச்சாலைக்குள்ளிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைக்கமைய காப்புறுதி நிறுவன அதிகாரிபோல் வேடமிட்டே இவர்கள் ஹெரோயின் விநியோகித்து வந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு விசாரணைகளின் பின்னர் கம்பளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்
கம்பளை பொலிஸ் நிலைய விசேட போதைவஸ்து ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றுக்கமைய கம்பளை கிரிந்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் பயணித்த காரை மடக்கிப்பிடித்து சோதனைக்கு உட்படுத்தினர்.

பிரதான சந்தேக நபரிடம் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மற்றைய நபரிடம் 8 கிராம் போதைப்பொருள் உட்பட கைத்தொலைபேசிகள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து மலையக பிரதேசத்துக்கு ஹெரோயின் விநியோகிப்பதற்கென்றே அத்துருகிரிய சுதா என்ற நபர் பேராதனை பிரதேசத்தில் வாடகைக்கு வீடு ஒன்றை தங்கியிருப்பதாகவும் குறித்த நபரிடமே கம்பளை, நாவலப்பிட்டி,கினிகஸ்தேனை, ஹட்டன்,தலவாக்கலை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களிலிருந்து ஹெரோயின் விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
தேவைப்படும் ஹெரோயினை தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரதான சந்தேக நபரான சங்க என்பவருடன் அத்துருகிரிய சுதா தொடர்பு கொண்டு தொலைபேசி மூலமான பணப்பரிமாற்றம் செய்து கொண்டதன் பின்னர் சங்கவினால் தங்களுக்கு பிறப்பிக்கப்படும் கட்டளைக்கு அமையவே கொழும்பிலிருந்து கம்பளை பிரதேசத்துக்கு ஹெரோயினை கொண்டு வந்து வியாபாரிகளிடம் கையளிப்பதாகாவும் கூறியுள்ளனர்.

இவ்வாறு கொழும்பிலிருந்து கம்பளைக்கு ஒருமுறை ஹெரோயின் கொண்டு வருவதற்கு தங்களுக்கு 15,000 ரூபா பணமும் ஒரு பைக்கெற் ஹெரோயினும் தருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் காப்புறுதி நிறுவனத்தில் தான் கடமை புரிந்த நிலையில் தொழிலை இராஜினாமாச் செய்து விட்டாதாகவும் கைது செய்யப்பட்டவர்களின் பிரதான சந்தேக நபரான பியகம திசேரா என்று அழைக்கப்படும் நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
காப்புறுதி நிறுவன அதிகாரிகள் போன்று வேடமிட்டு கம்பளையை மையப்படுத்தி மலையகத்தின் பல பிரதேசங்களில் ஹெரோயின் விநியோகம். 2 பேர் கைது. காப்புறுதி நிறுவன அதிகாரிகள் போன்று வேடமிட்டு கம்பளையை மையப்படுத்தி மலையகத்தின் பல பிரதேசங்களில் ஹெரோயின் விநியோகம். 2 பேர் கைது. Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5