விகாரதிபதி தேரர் கொலை... கயிரால் கட்டப்பட்டிருந்த நிலையில் சடலம் மீட்பு . - Madawala News Number 1 Tamil website from Srilanka

விகாரதிபதி தேரர் கொலை... கயிரால் கட்டப்பட்டிருந்த நிலையில் சடலம் மீட்பு .


இந்துருவ - மஹயிந்துருவ பிரதேச விகாரை விகாரதிபதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

73 வயதுடைய  விகாராரதிபதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

விகாரைக்கு வந்தவர்கள் வழங்கிய தகவலை  தொடர்ந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் துறவியின் சடலம் கயிரால்  கட்டப்பட்டிருப்பதாக போலீஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை, இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை  நடத்தப்பட உள்ளது.
விகாரதிபதி தேரர் கொலை... கயிரால் கட்டப்பட்டிருந்த நிலையில் சடலம் மீட்பு . விகாரதிபதி தேரர்  கொலை... கயிரால்  கட்டப்பட்டிருந்த நிலையில் சடலம் மீட்பு . Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5