முஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

முஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு.இனங்களுக்கிடையிலான பன்மைத்துவ கலாசாரத்தை 

கட்டியெழுப்ப பௌத்த துறவிகள் ஆர்வம்.
----------------------------------

"நீண்ட இடை வெளிக்குப்பின்னர்! -மீவளதெனிய, கெலிஒயாவில் ஆரம்பம் ; முஸ்லீம்கள் மகிழ்ச்சி"


அரசியல் மற்றும் இன்னோரன்ன பேதங்களுக்கும் அப்பால் நாட்டின் இனங்களுக்கிடையில் பரஸ்பர பன்மைத்துவ கலாசாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக பௌத்த மதகுருமார்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் சார்ந்த உற்சவ கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்து, இனிப்பு பண்டங்கள் வழங்கும் நிகழ்வு மீவளதெனிய பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படுள்ளது.


இவ்வாறான செயற்பாடுகள் குறித்து முஸ்லிம் சமுகம் அவர்களுக்கு நன்றி பாராட்டியுள்ளனர்.

இலங்கையில் வாழும் ஒவ்வொரு மத்தத்தினரும் தங்களது மதம் சார்ந்த உற்சவ கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்து, இனிப்பு பண்டங்கள் வழங்கும் ஆரம்ப கட்ட நிகழ்வவொன்று முஸ்லீம்களின் ஈதுல் பித்ரி நோன்புப்பெரு நாள் தினமான நேற்று (24) மீவளதெனிய பிரதேசத்திலுள்ள- கம்புராதெனிய டிகிரி போகககொட விஹாரையின் சங்கைகுரிய விகாராதிபதி மீவதுரே வஜிரயான தேரர் தலைமையில் நடைபெற்றது.


இந்த வகையில் ஈதுல் பித்ரி நோன்புப்பெரு நாள் தினமான நேற்று அதனை நினைவு கூறும் பொருட்டு, மீவளதெனிய, கெலிஒயாவிலுள்ள அல் ஹுதா ஜும்மா மஸ்ஜித்க்கு விஜயம் செய்துள்ள பௌத்த விஹாரையின் விஹாராதி அப்பள்ளிவாயல்
பரிபாலன சபை உறுப்பினர்களிடம் அன்பளிப்புச் செய்வதையும் இங்கு ஒரு தொகை பழவகைகளைகளையும் இனிப்புப்பண்டங்களையும் படங்களில் காணலாம்.

தகவல்: எம். அஸ்பாக்.

முஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு. முஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு. Reviewed by Madawala News on May 25, 2020 Rating: 5