கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடல்.. ஆளுநர் தலைமையில்.



ஏ.பி.எம்.அஸ்ஹர்
கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும்
ஆரம்பிப்பது தொடர்பான உயர் மட்டக்கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நேற்று நடைபெற்றது.


ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்ற இவ்வுயர் மட்டக்கலந்துரையாடலில் இம்மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் உயர் தர கல்வி நடவடிக்கைகளை மீள.ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களின் சுகாதார நன்மை கருதி எடுக்கப்பட வேண்டிய முக்கிய செயற்பாடுகள் தொடர்பாகவும் இங்கு ஆளுநரால் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன்.

அத்துடன் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் வைரஸ் தொற்றி நீக்கிகள் அகற்ற்ப்படுவதுடன் வைரஸ் தொற்றை அறிந்து கொள்வதற்கான உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் கொரோனா வைரஸ் ஆபத்து தொடர்பாக பெற்றோர்களுக்கு மாகாண மாவட்ட வலய மற்றும் பாடசாலை மட்டங்களில் விளிப்புனர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்குமாறும் உத்தரவிட்டார்.


இவ்வுயர்மட்டக்ககலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த கல்வி உயர் அதிகாரிகள் சுகாதார்த்துறையின் உயர் அதிகாரிகள் உட்பட பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடல்.. ஆளுநர் தலைமையில். கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும்   ஆரம்பிப்பது தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடல்.. ஆளுநர் தலைமையில். Reviewed by Madawala News on May 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.