துன்பங்களற்ற ஆரோக்கியமான நோன்புப் பெருநாளாக அமையட்டும்! - Madawala News Number 1 Tamil website from Srilanka

துன்பங்களற்ற ஆரோக்கியமான நோன்புப் பெருநாளாக அமையட்டும்!நோன்புப் பெருநாள் ஆசிச்செய்தி

துன்பங்களற்ற ஆரோக்கியமான நோன்புப் பெருநாளாக அமையட்டும்!


முழு உலகிலும் உள்ள முஸ்லிம் பக்தர்கள் ஒரு மாத காலம் நோன்பு நோற்று ஷவ்வால் தலைப் பிறை தென்பட்டதன்  பிறகு கொண்டாடுகின்ற ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தின வைபவத்தின் மூலம் சமத்துவத்தின் உயர்ந்த செய்தி புலப்படுத்தப்படுகிறது. அத்துடன் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு புனித அல்குர்ஆனை இறக்கியருளிய மாதமும் ரமழானாகும். அவ் உன்னதமான நோன்புப் பெருநாள் தினத்தை பக்தியுடன் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது இதய பூர்வமான புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முஸ்லிம்கள் நோன்பு நோற்று சமய ரீதியான விவகாரங்களில் அதிக ஈடுபாடு கொண்டு இறை திருப்தியை முழுமையாக எதிர்பார்க்கின்ற ஒரு காலப்பகுதியாக ரமலான் மாதம் காணப்படுகிறது.

முஸ்லிம்கள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்ற இம்மார்க்கக் கடமையை இம்முறை முழு உலகில் கொரோனா நோய்த் தொற்றுக்கு முகம் கொடுத்திருக்கும் சமயத்தில் செய்ய நேரிட்டிருக்கிறது.

முழு உலகமும் முற்றுப்பெற வேண்டும் எனக்கூறி மார்க்க எதிர்நோக்கியிருக்கும் இப்பேரனர்த்தம் விடயங்களில் ஈடுபடுமாறு ரமழான் மாத ஆரம்பத்திலேயே நாம் அனைத்து முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அத்தகைய முறையான நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடப்பது இஸ்லாமிய வழிகாட்டல்களுடன் பினைந்திருக்கின்ற விடயம் என்பதை இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். அவ்வழிகாட்டல்களை பின்பற்றுவதில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகம் கவலை துன்பங்களை விட்டும் விடுதலை பெற என்றும் அனைத்து மனிதர்களுக்கும் சந்தோசமும் நிம்மதியும் கிட்ட வேண்டும் என்றும் நாம் இறைவன் பெயரால் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உன்னதமான சமாதானத்தினை எதிர்பார்த்து ஆரோக்கியமான உலகை வேண்டியவனாய் பிரார்த்தனை செய்கின்றேன்.

சஜித் பிரேமதாச

தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தி
துன்பங்களற்ற ஆரோக்கியமான நோன்புப் பெருநாளாக அமையட்டும்! துன்பங்களற்ற ஆரோக்கியமான நோன்புப் பெருநாளாக அமையட்டும்! Reviewed by Madawala News on May 24, 2020 Rating: 5