முஸ்லிம் உறவுகளின் இப் புனித நாளில் கொடிய தொற்று நோய்கள், முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத செயல்கள் அடியோடு ஒழிய பரம இயற்கையை வேண்டுகிறேன். - Madawala News Number 1 Tamil website from Srilanka

முஸ்லிம் உறவுகளின் இப் புனித நாளில் கொடிய தொற்று நோய்கள், முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத செயல்கள் அடியோடு ஒழிய பரம இயற்கையை வேண்டுகிறேன்.உலக வாழ் முஸ்லிம்கள் தங்களின் ஐம்பெரும் கடமைகளில்

 ஒன்றான நோன்பை 30 நாளும் நோற்று முழு இறை திருப்தியோடு பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் என 
ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி
அவர்கள் தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் உறவுகளின் நோன்புப் பெருநாள் எனும் இப்புனித நாளில் நாட்டிலே தலை தூக்கி இருக்கும் 
கொரோனா எனும் கொடிய தொற்று நோய் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயல்கள் அடியோடு ஒழிய வேண்டுமென எனது இறைவனை வேண்டிக் கொள்வதுடன்

முஸ்லிம் சகோதரர்களின்
அல்குர்ஆன் அருள் பெற்ற மாதம், பத்ர் யுத்த தியாக வெற்றி போன்றவற்றை ஞாபகப் படுத்துகின்ற
இம்மாததில் செய்கின்ற நற்செயல்களுக்கு பல மடங்கு நன்மைகளை முஸ்லிம் சகோதரர்களுக்கு  இறைவன் அளிக்கின்றான்.

அத்துடன் கொழும்பு மாவட்டத்திலும் சரி
நாட்டில் ஏனைய 
பிரதேசங்களின் சரி 
வாழும் முஸ்லிம் உறவுகள் உங்களுடைய இப்புனித நாளில்
சமூக இடைவெளியை கடைப்பிடித்து
நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டுமென உங்களில்
ஒரு உறவாக
வேண்டிக்கொள்கிறேன்

அத்துடன் எனது முஸ்லிம் உறவுகள்
தங்களுடைய குடும்பங்களுடன்
மகிழ்ச்சியாக இந்தப் பெருநாளை கொண்டாட பிராத்திக்கின்றேன்.
முஸ்லிம் உறவுகளின் இப் புனித நாளில் கொடிய தொற்று நோய்கள், முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத செயல்கள் அடியோடு ஒழிய பரம இயற்கையை வேண்டுகிறேன். முஸ்லிம் உறவுகளின் இப் புனித நாளில் கொடிய தொற்று நோய்கள், முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத செயல்கள் அடியோடு ஒழிய பரம இயற்கையை வேண்டுகிறேன். Reviewed by Madawala News on May 24, 2020 Rating: 5