கொரோனா வைரசும் - ஊடகங்களும்.... அவதானம் அவசியம்!


எம்.எம்.ஏ.ஸமட்
இரண்டாம் உலக மகா யுத்ததத்தின் பேரழிவை கொரோனா வைரஸின் கோரம் ஏற்படுத்தி விடுமா
என்ற அச்சம் உலகளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலில,; இலங்கையில் முதலாவது கொரோன தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நாள் முதல் பலர் நோய்த்தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் மரணங்களும் சம்பவதித்துள்ளன.


அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளாம் காணப்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,  வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் பிரவேசித்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்hனவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்கள் என பலர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலும், வீடுகளிலும் தனிமைக்குட்;படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


அத்துடன், நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர்; குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கண்காணிப்பு நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வந்த பலரும் நோய்தொற்றுக்குள்ளாகாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டு அவர்;களும் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


உயிர் குடிக்கும் கொரோனா மனித குலத்தை மிக மோசமாகப் பாதித்துக் கொண்டு வருகின்றது. கொரோன தொடர்பான தரவுகளை தினமும் இன்றைப்படுத்தி வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரை உலகளவில் 206 நாடுகளில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 இலட்சத்தைக் கடந்து விட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் நோய் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 246,000யையும் கடந்திருக்கிறது. 


இந்நிலையில், உலகத்திற்கு நவீனத்துவங்களை அறிமுகப்படுத்திய  ஐரோப்பிய மற்றும் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாத் தொற்றின் பாதிப்பை மிக மோசமாகச் சந்தித்தித்துள்ளன. கொவிட் 19 அரசியல், சமூக, பொருளாதாரத்தை மாத்திரமின்றி மனித குலத்தை உடல், உள ரீதியாகவும் பாதித்துள்ளதுடன் இந்நோய் தொற்று தொடர்பான வதந்திகளையும், புனைக்கதைகளையும் அதிகரித்திருக்கிறது. பொய்களையும் புனைக் கதைகளையும், வதந்திகளையும் பரப்பும் பேர்வழிகளான சமூக வலைத்தள ஜாம்பவான்கள் அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கைதுக்கும் உட்பட்டிருக்கிறார்கள்.


சமூகவலைத்தள ஜாம்பவான்களுக்கு அடுத்த படிநிலையில் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட ஓரிரு தனியார் ஊடகங்கள் கொரோனாவைப் பயன்படுத்தி மதச் சாயம் பூசுவதை ஊக்கிவிக்க முயற்சிக்கின்றன. ஒரு இனத்தின் மீது பிரிதொரு இனம் வஞ்சம் தீர்ப்பதற்கும் பழி சுமத்துவதற்கும்  ஊக்கியாகச் செயற்படும் வகையில் செய்திகளைத் தொகுத்து வெளியிடுவதாகவும், நேர்காணல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதாகவும் குற்றஞ் சுமத்தப்படுவதையும்  அவதானிக்க முடிகிறது.

கொரோனாவும் ஊடகங்களும்

இலட்சக்கணக்கோணரைத் தொற்றி ஆயிரக்கணக்காணோரை பலி கொண்டு உலகத்தை முடக்கியுள்ள இக்கொரோனாவினால் இலங்கையும் பல்வேறு துயங்களைச் ;சுமந்து கொண்டிருக்கிறது. சமூக, பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும், கொரானாவுக்கு இனமில்லை. மதமில்லை, நகர, கிராமம் தெரியாது. ஊர் பெயர் தெரியாது. குறிப்பிட்ட வர்க்கத்தினரைத்தான் தொற்ற வேண்டும் என்ற திட்டமேதுவுமில்லை.
'இக்கொவிட் 19' ஒரு நோயாளரிடமிருந்து இன்னுமொருவருக்கு எவ்வழியில் தொற்ற முடியுமோ அவ்வழியில் தொற்றிருக்கொண்டிருக்கிறது. உலகில் அடையாளம் காணப்பட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவலடையும் முறைகள் மற்றும் வழிகளிலும் பார்க்க கொரோனா நோய்தொற்று ஆச்சரியமிக்க வழிகளில் பரவலடைந்து கொண்டிருக்கிறது.


இந்நிலையில், இந்நோய்த் தொற்று ஒரு இனத்திற்கு மாத்திரமென்றோ அல்லது ஒரு இனத்தினரினால்தான் பரவுகிறது என்றோ அடையாளாப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களிலும் வெளிப்படுத்த முனைவது அறியாமையின் வெளிப்பாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  இவர்களின் அறியாமையின் பின்புலம் தொடர்பில் அறிந்தவர்களும் தங்களது யதாhத்தமான கருத்துக்களை அவர்கள்சார் சமூகத்திலிருந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பதிவிட வேண்டியுள்ளது.


அண்மையில், ஒரு தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணல் நிகழ்ச்சியிலும், மற்றுமொரு  தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்தித் தொகுப்பிலும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களும், காணொலிகளும் இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களை மிகவும் புன்படுத்தியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.


இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்கள் நாட்டுக்கு ஆபத்து நேர்ந்த போதெல்லாம், இந்நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். தற்போதும் அர்ப்பணிப்புக்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நெருக்கடியான நிலையில், சில முஸ்லிம் தனியார் நிறுவனங்கள்  இத்கொரோனா வைரஸை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நவடிக்கைகளுக்கு நிதி உதவியாக பல கோடிக்கணக்கான ருபாய்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், தொழில்நுட்ப உதவிகளைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள், தொழிலிழந்து நிர்கதிக்குள்ளாகியிருக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்;டிருக்கும் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய சகோதர இனத்தினருக்கும் முஸ்லிம் தனவந்தர்கள் தங்களால் முடிந்த உதவிகளைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் இத்தகைய ஊடகங்ளின் கமரா கண்கள்; படமெடுப்பதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.


பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட பிரபல்யமான சமூக ஊடங்களில்  பதிவேற்றப்படுகின்ற விடயங்கள் எவ்வாறு மக்களிடையே விரும்பத்தகாத விடயங்களை முன்னொண்டு செல்கிறதோ அவ்வாறே ஒரு சில பொறுப்பற்ற ; பத்திரிகை, வானொலி தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்;கள் விரும்பத்தகாத விடயங்களையும் மக்கள் மயப்படுத்த முனைவதை காண முடிகிறது.


பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்;கள் எவ்வாறு தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்றதொரு ஒழுக்கக் கோவைக்கான வரைபு  ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வரைபில், அனைத்து இலத்திரனியல் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள், இணையத்தளங்கள் உட்பட ஊடகவியலாளர்கள், இந்த ஊடக ஒழுங்குவிதிகளின் கோவையை அனுசரித்து, இலங்கையின் இலத்திரனியல் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள், இணையத்தளங்கள் ஆகியவை சுதந்திரமாகவும் தேசமயம் பொறுப்புணர்வோடும், தகவல் அறிவோரின் தேவைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றுக்கேற்றாற்போல அவதானத்துடன் தகவல்களை வழங்குகின்ற அதேசமயம் ஊடகத்துறையின் உயர்ந்த தரத்தையும் பேணவேண்டியது அவசியமானதாகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவ்வரைபில்;, பொதுமக்களுடைய எதிர்பார்ப்புக்கு களங்கத்தை ஏற்படுத்தல், நாட்டின் ஒழுக்கவிதியை அல்லது பொதுமக்களின் ரசனை மற்றும் ஒழுக்கத்தின் தரம் தாழ்த்துதல், வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும் விமர்சனங்கள், மதக்குழுக்கள், சமூகங்கள் அல்லது இனவாதத்தை தூண்டும், மதப்பூசல்களை ஏற்படுத்தும், அவதூறான கருத்துக்கள், துஷ்பிரயோகமான, மானபங்கத்துக்குரிய வேண்டுமென்றே வெளிப்படுத்தும் தவறான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள், முழுமையற்ற உண்மைத்தகவல்கள், உட்பட வேண்டுமென்றே தவிர்த்துக்கொள்ளப்படுபவை, பாரபட்சமான மற்றும் பொதுமக்களை தவறாக வழிப்படுத்தும் உள்ளடக்கங்கள், வன்முறைகளை ஊக்கப்படுத்தும் அல்லது தூண்டிவிடும் உள்ளடக்கங்கள், சட்டம், ஒழுங்கு மற்றும் தேசியத்துக்கு எதிரான நடைமுறைகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் விடயங்கள்.  ஜனாதிபதி, நீதித்துறை மற்றும் தேசத்தினுடைய ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் விடயங்கள், ஒரு நபருடைய குடும்ப வாழ்க்கை, நிதித்தகவல்கள், இனம், மதம் , சாதி , பால்நிலை வேறுபாடுகள், உடல் மற்றும் மனோநிலை குறைபாடுகள், அங்கவீனம், ஒருவரது இல்லம் மற்றும் குடும்பம் உட்பட பொதுமக்களுக்கு நேரடியான கரிசனை ஏற்படுத்தாதவிடத்து தனிநபர்களின் வைத்தியசாலை அனுமதி பற்றியவை, .தனி ஒரு நபரை பிரத்தியேகமாகவோ அல்லது இன, மொழி, மத ரீதியாக ஒரு குழுவை கடுமையாகச் சாடுதல், .மூடநம்பிக்கைகள், மற்றும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள,; அராஐகம், போதைவஸ்து துஷ்பிரயோகம், மூர்க்கத்தனமான வக்கிரப்போக்கு, பாலியல் ரீதியான முறைகேடுகள் மற்றும் வன்முறைகளை ஊக்கப்படுத்தல், ஏழ்மையை இகழ்தல் என்ற மேற்படி விடயங்களைத் எந்தவொரு ஊடகமும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவ்வரைபில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அத்தோடு, அனைத்து இலத்திரனியல், பத்திரிகைத்துறை, இணையத்தள நிறுவனங்களின் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் தமது தகவல் உள்ளடக்கங்களை வெளியிட முன்னர் அவற்றின் கச்சிதத்தன்மையை உறுதிப்படுத்த சகல முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

வெளியிடப்பட்ட தகவல் தவறானதென ஆசிரியர் தெரிந்துகொள்ளும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதலளிக்கும் விதத்தில் தவறான குறித்த தகவலை சரியான முறையில் திருத்தத்தோடு முன்னிலைப் படுத்தி, மன்னிப்புக்கோரலுடன் அதனை பிரசுரிக்கவேண்டும், தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் என்பவற்றைப் பொறுத்தவரை உண்மைக்குப்புறம்பான அறிக்கைகள், அவர்களது கௌரவம், மேன்மை உணர்வுகள், தனித்துவம் காரியாலய நடவடிக்கைகள் என்பவற்றை பாதிக்குமிடத்து நியாயமான, ஏற்புடைய விதத்தில் பாதிப்புற்றோருக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

இவற்றோடு. ஒவ்வொரு ஊடகவியலாளரும் ஏற்புடையதான முறைகளில் தனது ஆளுமைக்குட்பட்டதாக வெளியிடப்படவிருப்பவை சம்பந்தமாக உண்மையான ஓர் அறிக்கை ஒரு புறத்திலும் , ஏனைய விமர்சனங்கள் அபிப்பிராயங்களின் வெளிப்பாடுகள் மறுபுறமுமாக தெளிவான வரையறையைக் கொண்டிருத்தல் வேண்டும் .

துயரம் மற்றும் அதிர்ச்சி சம்பந்தப்பட்ட விசாரணைகள் பற்றிய விடயங்களைக் கையாளும்போது மிக அவதானமாக நடந்து கொள்ளல் வேண்டும் . இவ்விடயங்கள் குறித்த அணுகுமுறைகள் எச்சரிக்கையோடும், நுணுக்கமான முறையிலும் கையாளப்படவேண்டும்.

தற்கொலை வழக்குகள் பற்றிய செய்தி வெளியிடும்போது மிக அவதானமாக நடந்து கொள்வதோடு, தற்கொலை மேற்கொள்ளப்பட்ட விதம்குறித்து அதிகளவில் விபரித்தலாகாது. சம்பவங்களை மீள உருவாக்குதல் குற்றவியல்களும் விபத்துக்களும் செய்திகளாக மட்டும் மீள வளங்கப்படவேண்டும.; அந்த சம்பவங்களை நாடக உருவில் மீண்டும் நடக்கும் விதத்தில் செயற்படுத்தப்படாது  பிரேதங்களை காட்சிப்படுத்தல் செய்திகளை வெளியிடும்போதும் சம்பவங்களை அறிவிக்கும் போதும் பிரேதங்களை காட்சிப்படுத்தப்படாது.

குற்றச்சம்பவங்கள் மற்றும் குற்றவியல் வழக்குகள் பற்றி செய்தி வெளியிடும்போது சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டாலன்றி கீழ்வருவனவற்றை வெளியிடலாகாது. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் பெயர் முன்னர் குற்றஞ்சாட்டப்படாதவராகவும், 16 வயதுக்குட்பட்ட குற்றச்செயல் சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்ட இளவயதினரின் பெயர். குற்றச்செயல் ஒன்று சம்பந்தமாக உறவினரது சம்மதமின்றி குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை அடையாளப்படுத்துதல்.

இவற்றிற்கு மேலாக, ஒவ்வொரு ஊடகவியலாளரும், தனது செய்திமூலத்தின் அந்தரங்கத்தன்மையை பாதுகாக்க வேண்டியவராகின்றார். தனது செய்திமூலம் அந்நபர் அதிகாரமளித்தாலன்றி அவர் பற்றிய அடையாளத்தை வெளிப்படுத்தலாகாது. ஒவ்வொரு ஊடகவியலாளரும் தனது தொழில் மகத்துவத்தை பேணவேண்டியவராகின்றார். பணமாகவோ, சேவையாகவோ அல்லது எதிர்பாராதவிதத்திலோ லஞ்சம் பெறலாகாது.

தனிப்பட்டவர்களுடைய கடந்தகால குற்றவியல் சம்பந்தப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக செய்திகளை அறியத்தரும்போது, சம்பந்தப்பட்டவர்களுடைய உறவினர்கள் அது பற்றிய தகவல்களால் மன உளைச்சல்களுக்குள்ளாகாதிருப்பதை உறுதி செய்யவேண்டும் என்ற பல்வேறு விதிகள் அவ்வொழுக்க கோவையின் வரைபில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வரைபின்; விதிகள் பின்பற்றப்படுகின்றனவா அல்லது மீறப்படுகின்றனவா என்பதை அவ்வூடகங்களின் வாசகர்களும், நேயர்களும், ரசியர்களுமே, அறிவார்கள்.

கொரோனா ஒழிப்பும் பொறுப்பும்,
இந்நிலையில்தான் கொரோனா தொற்றுப் பரவலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் இந்நாடு கொரோன தொற்றிலிருந்து முற்றாக விடுபடுவதற்கும் சுகாதாரத்துறையினரும், முப்படை மற்றும் பொலிஸாரும் இரவு பகல் பாராமல் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.

இவர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் கௌரவப்படுத்துவதோடு கொரோனா ஒழிப்பின் முக்கிய பொறுப்பாளர்களான இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தங்களது ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும். ஆனால், இக்கொரோனைவைப் பயன்படுத்தி, அரசியல் இலாபமடைவதற்கும். தொழில் ரீதியான விளம்பரங்களை அதிகரித்துக் கொள்வதற்கும்,  சுயமாக பிரபல்யமடைவதற்கும் பேஸ்புக், வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களும்,;  ஒரு சில தனியார் ஊடகங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதுடன் சமூக ஊடக ஜாம்பவான்களினால் வெளிப்படுத்தப்படுகின்றன ஆதரமற்ற பதிவுகள் மக்களை அச்சத்துக்குள்ளாக்குவதோடு போலித் தகவல்கள் மக்கள் மத்தியில் பரவலடையவும் காரணமாக அமைந்து விடுகின்றன.

தொற்று நோய்கள் பொதுச் சுகாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைப்போல் சமூக உளவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அத்துடன் இனவாத, மதவாத, அடிப்படையிலான வெறுப்புணர்வுகள் வெளிவருவதற்கும் காரணமாகின்றன.

தொற்று நோய்களைப் பொறுத்தவரையில், அவை ஏற்படுத்தும் கண்ணுக்குத் தெரியக் கூடிய தாக்கங்கள் பரவலாகத் தெரியாது. ஆனால், அவை உளவியல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று உளவியலாளர் ஸ்டீவன் டைலர் கூறுகிறார்.

தொற்றுப்பரவாமல் எடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் உளவியலைப் பாதிக்கும்  எனக் கூறப்படுகின்ற வேளையில் ஆற்றுப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

கொவிட் 19ஐ விட மோசமான விளைவுகளை ஏற்படுத்திய தொற்றுக்கள் பல தலைமுறைகளாக நம்முடன் இருந்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இத்தொற்று நோய்;க்கு ஊடகங்கள் வழங்கும் அதீதி முக்கியத்துவம், மற்றும் இந்நோய்தொற்று தொடர்பாக பொதுமக்களிடத்திலிருந்து எழும் கேள்விகள் இந்நோய்தொற்றை மிகைப்படுத்திக் காட்டுவதாக இந்தியாவின் பொதுச் சுகாதார அறிவியலாளர் டாக்டர் விக்ரம் பட்டேல் குறிப்பிட்டுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று பதிவேற்றியிருக்கிறது.

இந்நோய் தொடர்பான பயம் அல்லது அச்சம்  ஒரு சக்திவாய்ந்த மற்றும் தேவையான உணர்வுதான். அது மனித வாழ்க்கையையும் உடலையும் பாதுகாக்கத் தேவையான எதிர்வினையை ஏற்படுத்தி ஆபத்தைத்தடுக்கும், ஆனால், பொய்யான, ஆபத்தான தகவல்கள், பாகுபாடுகள், இனவெறுப்புக் கருத்துக்கள் என்பவற்றை சமாளிக் வேண்டிய கடப்பாட்டுக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளதுடன், கொரோனாத் தொற்றும் இனவாதமும் பரவலடையாமல் இருப்பதில் அவதானம் அவசியமானது.

இந்நிலையில், உண்மையான தகவல்கள் பொறுப்புடன் தெரிவிக்கப்படுகின்றபோது மக்கள் முன்னெச்சரிக்கiயுடன் செயற்படுவதற்கு வழியேற்படுத்தும.; மாறாக, வதந்திகள், பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றபோது அது மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளவே செய்யும். கொரோனா வைரஸ் தொற்று உலகில் ஏற்பட்டு 4 மாதங்களை நெருங்கவுள்ள நிலையில், அவ்வைரஸ் தொடர்பான இலட்சக்கானக்கான வதந்திகளும், பொய்யனா தகவல்களும, போலிச் செய்திகளும்; சமூக ஊடகங்களை நிரப்பியிருக்கிறது.

அதனால், ஒரு போலிச் செய்தி அல்லது தகவல்கள் எவ்வாற காணப்படும் அதை எவ்வாறு அடையாளம் காண முடியும் என்ற விளக்கங்கள் கடந்த காலங்களில் உரிய அதிகாரத் தரப்புக்களினால் சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய விபரங்கள் தொடர்பான அறிவைப் பெறுவது போலிச் செய்திகளை நம்பாதிருப்பதற்கும் அவற்றை பரிமாறாமல் இருப்பதற்கும். உதவும்.  அத்துடன், சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படுகின்ற இத்தகைய பல்வேறு தகவல்கள் தொடர்பில் சில பொறுப்பு வாய்ந்த இலத்திரனியல் ஊடகங்களும் செய்தி இணையத்தளங்களும் வெளிச்சம் போடத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு சில ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவர்களை பிரச்சினைக்;குள் தள்ளியதை ஞாபகமூட்ட வேண்டியுள்ளது. அதேபோல் இந்நெருக்கடியான நிலையிலும் சில ஊடகங்கள் தங்களது ஊடகங்களைப் பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக மதச்சாயக் கருத்துக்களை முன்வைக்கத்தக்க நிகழ்ச்சிளை நடத்துவது, செய்திகளை  வழங்குவது எந்தவகையில் ஊடகத் தர்மமாக அமையும் என்ற கேள்வியும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஊடகவியலாளர்களின் பொறுப்பும், பணியும் நேர்த்தியாக முன்னெடுக்கும்போது ஊடக ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மாறாக, அந்தப் பொறுப்பை மறந்து செயற்படுவது ஊடகதர்மத்தையும் அதன் ஜனநாயகத்தையும் கேள்விக்குட்படுத்துவதோடு, தேசத்திற்கும் சமூகங்களுக்கும் செய்யும் துரோமாகக் கருதப்படவும் கூடும் என்பதையும் மறுதலிக்க முடியாது.

அதனால், பேனா எடுத்தவர்கள் எல்லாம், சமூகவலைத்தளங்களில் பதிவேற்றத் தெரிந்தவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள் என்று கருதப்படும் இக்காலகட்டத்தில் ஊடகத்தர்மத்தையும் அதன் ஜனநாயகத்தையும் பாதுகாத்து தமது பொறுப்பையும், பணியையும் நிறைவேற்றுவது கடினம் என்றாலும் ஜனநாயகத்தின் 4வது தூணான ஊடகத்துறைக்கு கலங்கம் ஏற்பட்டு விடாது செயற்படுவது ஊடகத்துறையை நேசிக்கின்ற அதன் பணியை கௌரவமாகக் கருதுகின்றவர்களின் தார்மீகப் பொறுப்hகும்.

இந்தப் பொறுப்புடன், தற்போதைய இக்கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அதிலிருந்து மக்களைப் பாதுகாக்க எவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமோ அத்தகைய நடவடிவக்கைகைள முன்னெடுக்க வேண்டியபொறுப்பு ஒவ்வொரு ஊடகவியலாளருக்கும,; ஊடகங்களும் உண்டு.

அதனால், மிகவும் நெருக்கடியான நிலையில் அனைத்து இன மக்களும் வாழ்ந்து வரும் சூழலில் மதச்சாயக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்;தி ஒரு இனத்தினருக்கு மட்டும்தான் கொரோனா தொற்று அதிகம் ஏற்படுகிறது அல்லது அவ்வினத்தினரே பரவலை ஏற்படுத்துகிறார்கள் என்ற அடிப்படை எண்ணங்களை மக்கள் மத்தியில் விதைக்க முனைவது நோய்தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சை பெறுவதிலிருந்தும் தாமதப்படுத்தச் செய்யும் அல்லது அவர்கள் சிகிச்சை பெறாது ஒழிந்து வாழ வழி வகுக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுவதையும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

அது மாத்தரிமின்றி, நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளை  தனிக்கை செய்யாது அப்படியே ஒலி,ஒளிபரப்புச் செய்யாது தவிர்ப்பதன்; மூலமும் இந்நோய் தொற்றுக்குள்ளானவர்கள் தைரியமாக தாமாகவே முன்வந்து தனிமைப்படுத்தப்படவும் சிகிச்சை பெற்றுக்கொள்ளவம் ஊக்கப்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில,; கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின்  அறிகுறிகள் எவை, எவ்வாறு பரவுகிறது.. அத்தோற்று ஏற்படாமல் தடுப்பது எவ்வாறு போன்ற விடயங்கள் தினமும் உத்தியோகபூர்வ ஊகங்கள் வாயிலாகவும் ஏனைய வழிகளிலும்; அறிவூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இவ்விழிப்புணர்வு நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்குவதோடு இன, மத, பிரதேசம் கடந்து தொற்றும் கொவிட் 19 சவாலை வெற்றி கொள்வதற்கு இன, மத: பிரதேச பேதங்கள் கடந்து  சுகாதாரத் தரைப்பினராலும், முப்படையினர், பொலிஸாரினாலும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவது இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு  பிரஜையினதும் கடப்பாடாகவுள்ளது போன்று இன, மதவாதம் பரவலடையாமலும் அதனைப் பரப்பாமல் இருப்பதிலும் கூடிய அவதானம் அவசியமாகும்.

கொரோனா வைரசும் - ஊடகங்களும்.... அவதானம் அவசியம்! கொரோனா வைரசும் - ஊடகங்களும்....  அவதானம் அவசியம்! Reviewed by Madawala News on April 06, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.