கொரோனா வைரஸ் நோயில் இருந்து எம்மை பாதுகாப்போம் சம்மாந்துறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொரோனா வைரஸ் நோயில் இருந்து எம்மை பாதுகாப்போம் சம்மாந்துறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


பாறுக் ஷிஹான்
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து சம்மாந்துறை
மக்களை பாதுகாப்பதற்காக  இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் அரச சட்டவாதி சட்ட முதுமாணி  எம்.ஏ.எம். லாபிரின்   தலைமையில் கோவிட் 19 எனும் கொடிய நோயில் இருந்து எம்மை பாதுகாப்போம்  எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று இடம்பெற்றது.

வியாழக்கிழமை(26) முற்பகல் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதான வீதி உள்ளக வீதிகளில் தொடர்ந்தது.

இதன் போது  பொதுமக்களுக்கு எவ்வாறு கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்வது மற்றும்  சம்மாந்துறை பொலிசார் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,  வைத்தியர்கள்,  பங்குபற்றுதலுடன்  இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி   நடைபெற்றது

விசேடமாக வீதிகளில் முகக்கவசம் இன்றி பயணித்தவர்கள் இடைநிறுத்தப்பட்டு இலவசமாக முகக்கவசம் அணிவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்த்ககது.
கொரோனா வைரஸ் நோயில் இருந்து எம்மை பாதுகாப்போம் சம்மாந்துறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. கொரோனா வைரஸ் நோயில் இருந்து எம்மை பாதுகாப்போம் சம்மாந்துறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. Reviewed by Madawala News on March 26, 2020 Rating: 5