மக்களின் ஒத்துழைப்பு குறைவு: பொருட்களும் அதிக விலையில் விற்பனை! - Madawala News Number 1 Tamil website from Srilanka

மக்களின் ஒத்துழைப்பு குறைவு: பொருட்களும் அதிக விலையில் விற்பனை!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கிழக்கு மாகாணத்தில் நேற்று (26) காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர்
பொருட்களை கொள்வனவு செய்ய பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஆகிய பிரதேசங்களில் சில இடங்களில் நேற்று பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாகவே காணப்பட்டது என்று பொலிஸார் கவலை தெரிவித்தனர்.

குறித்த பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டவுடன் பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பு குறித்து எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும், மதஸ்தலங்கள் ஊடாகவும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.

அத்தோடு பிரதேச சபைகளின் ஏற்பாட்டில் பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டி விஷேட சந்தைத் தொகுதிகளை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வனைத்து விடயங்களையும் கவனத்ததிற் கொள்ளாமல் பொதுமக்கள் குறித்த கட்டளைகளை மீறி செயற்பட்டமை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என பிரதேச சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தை தொகுதிகளில் நேற்றையதினம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட சில வியாபாரிகள் பொருட்களை கூடுதல் இலாபம் வைத்து விற்பனைகளில் ஈடுபட்டதாக நுகர்வோர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று இனிவரும் நாட்களில் இவ்வாறு கூடுதல் இலாபம் வைத்து பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நுகர்வோர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் ஒத்துழைப்பு குறைவு: பொருட்களும் அதிக விலையில் விற்பனை! மக்களின் ஒத்துழைப்பு குறைவு: பொருட்களும் அதிக விலையில் விற்பனை! Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5