சமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.


சமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என
பொலிஸார் இலங்கை மக்களை எச்சரித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் போது அடையாளம் தெரியாத நபர்களிடம் குறுந்தகவல் ஊடாக தொடர்பு ஏற்படுத்தி, தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மோசடி நபர்களினால் குறுந்தகவல் ஊடாக தொடர்புக் கொள்ளும் நபர்களின் புகைப்படங்கள் பெறும் நடவடிக்கைகள் இந்த நாட்களில் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பெற்றுக் கொள்ளும் புகைப்படங்களை நிர்வாண புகைப்படங்கள் இணைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் இவ்வாறான மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவ்வாறான நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக பொலிஸாரிடம் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5