சீனாவில் நேற்று மேலும் 143 நபர்கள் பலி.


சீனாவில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு மேலும் 143 பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலி
எண்ணிக்கை 1631 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹூபே மாகாண தலைநகர் வுஹானில் கொவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டது.

இதன்பின்னர் பீஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. எனினும், வுஹானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி நேற்று மேலும் 143 நபர்கள் பலியாகியுள்ளனர். ஹூபே மாகாணத்தில் மட்டும் 139 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சீனாவில், கொவிட்-19 வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1631 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும் 2641 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனா முழுவதும் மொத்தம் 67,535 பேர் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் நேற்று மேலும் 143 நபர்கள் பலி. சீனாவில்  நேற்று மேலும் 143 நபர்கள் பலி. Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.