நான் இல்லாவிட்டால் கிராம மக்கள், பெண் வனத்துறை அதிகாரியை தாக்கி இருப்பார்கள் ; ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த


பெண் அதிகாரியை மீனவ  கிராம மக்கள் தாக்காமல் நான் தான் காப்பாற்றினேன்.
இல்லாவிட்டால் அவர்கள் அதிகாரியை அடித்திருப்பர்கள்  ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பதிலளித்தார்.

நேற்றைய தினம் பெண் வனத்துறை அதிகாரி ஒருவர் காடழிப்புக்கு / சதுப்புநில அழிப்பு ) எதிராக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் வாக்குவாதம் செய்தது சமூக வலைகளில் பரவியது அனைவரும் அறிந்ததே.

தேவனி ஜெயதிலகே  எனப்படும் குறிப்பிட்ட வனவள அதிகாரி கம்பஹா பிரதேசத்தில் மைதானம் ஒன்றை அமைக்க சதுப்பு நிலங்களை ஒதுக்க முடியாது என போர்க்கொடி உயர்த்திய நிலையில்   நிலையில் கிராம மக்கள் மைதானம் வேண்டி நின்றனர்.

 இந்நிலையிலேயே அமைச்சருக்கும் குறிப்பிட்ட அதிகாரிக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வீடியோக்களாக சமூக வலைகளில் பதிவாகின.

2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு குளம் மேம்பாட்டு திட்டம் குறித்து விவாதிக்கவே இந்த கூட்டம் கூட்டப்பட்டது. 1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட  இந்த திட்டத்தில்  வனத்துறையினருக்கு இருந்த சில சிக்கல்களால் கிடைத்த 1 பில்லியன் நிதியில் 300 மில்லியன் பயன்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ராஜாங்க அமைச்சர் தான் இதனில் ஈடுபட்டு இல்லாவிட்டால்   குறிப்பிட்ட கிராம மக்கள்,  மீனவ  மக்கள் அந்த அதிகாரியை அடித்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார்

மேலும் இந்த நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது அதனை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை நாங்கள் சுற்றுச்சூழலை காப்பாற்றும் அதேவேளை பொதுமக்கள் வாழ்வதற்காக அபிவிருத்திகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார். குழந்தைகளை விளையாட அனுமதிப்பதன் மூலமும், குளம் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடர்வதன் மூலமும் ஒரு நடுத்தர நிலையை தான் கடைபிடிக்க  முயற்சிப்பதாக அமைச்சர் கூறினார்.

விளையாட்டு மைதானம் பிரச்சினை நீர்கொழும்பு  மீன்பிடி சமூகத்திற்கும் வனத்துறையினருக்கும் இடையே நீண்டகால பிரச்சினையாக இருந்தது

அமைச்சர் என்ற வகையில் தான் இரு பக்கத்தையும் பார்க்கவேண்டியுள்ளது குறிப்பிட்ட பிரச்சினையே நான் தீர்த்து வைக்கவே முயற்சி செய்தேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நான் இல்லாவிட்டால் கிராம மக்கள், பெண் வனத்துறை அதிகாரியை தாக்கி இருப்பார்கள் ; ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த நான் இல்லாவிட்டால் கிராம மக்கள், பெண் வனத்துறை  அதிகாரியை தாக்கி இருப்பார்கள் ; ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த Reviewed by nafees on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.