2019ம் ஆண்டின் சிறந்த வன விலங்கு புகைப்படம்... புகைப்படக் கலைஞரின் காத்திருப்புக்கு கிடைத்த வெகுமானம்.


--ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்--
ஆள்நடமாட்டமில்லாத லண்டனிலுள்ள சுரங்க நடைபாதையில் இரண்டு எலிகள் சண்டையிட்டுக்
கொள்ளும் புகைப்படம் 2019ம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளது.

https://news.sky.com/story/wildlife-photographer-of-the-year-fighting-mice-image-wins-peoples-choice-award-vote-11932232

சிதறி கிடக்கும் உணவு துணுக்குகளை கைப்பற்றுவதற்காக எலிகள் இரண்டு சண்டையிடும் காட்சிப் புகைப்படத்துடன்   48 ஆயிரம் புகைப்படங்கள் போட்டியிட்டன ஆனால் இப் புகைப்படமே வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த புகைப்படத்தை எடுப்பதற்காக ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சுரங்க நடைப்பாதையாக சென்று சரியான புகைப்பட ஷொட்டுக்காக காத்திருந்ததாக வெற்றியாளர் சாம் ரோவ்லி (Sam Rowley) விவரித்துள்ளார்.

லண்டனிலுள்ள அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியில் புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களின் வாக்கின் அடிப்படையில் இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
2019ம் ஆண்டின் சிறந்த வன விலங்கு புகைப்படம்... புகைப்படக் கலைஞரின் காத்திருப்புக்கு கிடைத்த வெகுமானம். 2019ம் ஆண்டின்  சிறந்த வன விலங்கு புகைப்படம்... புகைப்படக் கலைஞரின் காத்திருப்புக்கு கிடைத்த வெகுமானம். Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.