அரசியல் மயப்படுத்தலும், பயப்படுத்தலும்.


அண்மைக்கால முஸ்லிம் கட்சி  அரசியலின் தவறான வியூகங்கள் காரணமாக மக்கள் உளவியல்
ரீதியாக பல்வேறு அச்ச நிலைக்கு உள்ளாகி உள்ளனர், மட்டுமல்ல கடந்த தேர்தல் காலத்தில் தலைவர்களை நம்பி நாம் அளித்த  வாக்குகள் வீணாகி விட்ட குற்ற உணர்வும் இதில் கலந்துள்ளது,

மட்டுமல்ல தேசத்திலும் பெரும்பான்மை இன மக்களாலும்  அவ்வாறே நோக்கப் படுகின்றோம், அதற்கான காரணம் என்ன? ஏன் இந்தப் பழையான முடிவுகள் எடுக்கப்படுகின்றன, இதன் பின்னணி என்ன என்று ஆராய வேண்டியது சமூக  ஆர்வமுள்ள அனைவரதும் கடமையாகும் .

#அஷ்ரஃப்பின் #அரசியல்_மயமாக்கல்

அஷ்ரஃப் அவர்கள் தனித்துவ அடையாளமின்றி இருந்த சமூகத்தை அக்காலத்தில் ஒற்றுமைப்படுத்துவதற்காக இன ரீதியான அடையாளத்துடன் SLMC ஐ ஆரம்பித்தார், அத்துடன் அவர் நின்று விடவில்லை, முஸ்லிம் சமூகத்தை அரசியல் மயப்படுத்தினார், கிராமம் தோறும், குறிச்சிகளை அடிப்படையாக்க் கொண்டு கட்சி ஆலோசனைகளைப் பெற்றார், சிறப்பான தனிப்பட்ட நபர்களையும் தனது ஆலோசகர்களிக வைத்து வழி நடாத்தினார், அதனால் தேசிய ரீதியிலும், உள்ளூர் மட்டத்திலும் பல வெற்றிகளை அடைந்தார், அதனால் முஸ்லிம் சமூகம் நன்மை அடைந்தது.மட்டுமல்ல மக்கள் அரசியல் விடயத்திலும்  விழிப்பாக இருந்தனர், ஆனால் இன்றைய நிலை தலை கீழானது.

#அரசியல்_பயப்படுத்தல்

இன்றைய தலைவர்கள் சாதாரண காலங்களில்  வேண்டு மென்று மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்குவதுடன், கிராமங்கள் தோறும் உட்கட்சி மோதல்களை உருவாக்கி, பிரதேச வாத்ததை தூண்டுவதையும் முதலீடாகக் கொண்ட தமது யுத்தியை வகுத்திருப்பதுடன் ,

,தேர்தல் காலங்களில் சமயத்தின் பேரிலும், சமூகத்தின் பேரிலும் வீணான அச்சமூட்டல்களை விதைத்து வாக்குகளை வேட்டையாட பழகியுள்ளனர்,, அவர்களால்  தேர்தல்கால யுக்தியாக பயன்படுத்தப்படும் இந்த விடயம் அவர்களுக்கான சொகுசுகளை வழங்கும் அதே வேளை, முஸ்லிம் சமூகத்தின் நிரந்தர இருப்பிற்கு ஆபத்தனதாக மாறுவதுடன்,  அதன் பின்னர் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் இவர்களது பேச்சே அடிப்படையாகியும்  விடுகின்றது,
இதற்கு பல உதாரணங்கள் உள்ளன,

#தோல்வியில்_மட்டும்_பங்காளிகள்

ஒரு சிந்திக்கக் கூடிய சமூகம் என்ற வகையில் எம்மை வழி நடத்துவதாகக் கூறும் இவ் அரசியல் தலைவர்களின் விடயத்தில் மிக  அவதானமாக இருக்க வேண்டி உள்ளது, இவர்கள் வெற்றிகளை தலைமையின்  சாணாக்கியமாகவும், தோல்விகளை சமூகத்தின் தோல்வியாகவும் காட்டி எம்மை மாட்டி விடுகின்றனர்.இந் நிலைமையை மாற்றியமைக்க சமூக ஆர்வமுள்ள புத்திஜீவிகள. அவசரமாக முன்வர வேண்டும்.

#ஆர்வமுள்ளவர்களுக்கு

கடந்த 5 வருடகாலமாக எமது முஸ்லிம் தலைவர்கள் என்று கூறுவோர் பேசிய பேச்சுக்களின் ஒலி, ஒளி, வடிவங்களையும், பத்திரிகை செய்திகளையும் ,சமூக ஊடகங்களில் தெரிவித்தவற்றையும், ஆர்வமுள்ளவர்கள் யாராவது ஒன்று திரட்டி அவற்றைப் பகுப்பாய்வு செய்வார்களாயின் தெளிவாக விளங்கும் இவர்கள் எங்களை எங்கு கொண்டு நிறுத்த முனைகின்றனர்,சமூகம் தொடர்பான இவர்களது, எதிர்காலத் திட்டங்கள் என்ன?  அஷ்ரஃபின் கொள்கை அரசியல் எங்கே போய் உள்ளது   என்பதை தெளிவாவ விளங்க முடியும்.

 எனவேதான்,  சமூகத்தின் நிரந்தர இருப்பும், நல்லிணக்கமும் கருதி,இவர்களை மிக அவதானமாகக் கையாள வேண்டி உள்ளது இவர்களது மறு பக்கங்கள் பற்றி உற்று நோக்கி வேண்டியும் உள்ளது.

#இறுதியான_உண்மை

கோட்டாபாய ராஜபக்‌ஷ அவர்களின் அரசு கடந்த நவம்பரில் வந்ததில் இருந்து  அமைச்சரவையில் எந்த முஸ்லிமும் இல்லாத நிலையிலும், இவர்கள் கூறிய அச்ச நிலை ,பர்மா பயங்கரம் ,பள்ளி உடைப்பு ,மாடு மறுப்பு, , எதுவுமே இடம்பெற வில்லை,  நாடும் சமூகங்களும் அமைதியாக உள்ளன, எனவேதான் கடந்த காலங்களில்  இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முஸ்லிம் தலைவர்களும் ,இவர்களுக்குப் பின்னால் உள்ள  மறைகரங்களும் கூட காரணமாக இருந்திருக்கலாமோ ?என்றும் எண்ணத் தோன்றுகின்றது, ஏனெனில் தேர்தல் காலங்களில் அவ்வாறான விடயங்களே இவர்களுக்கான முதலீடாகவும் இருந்து வந்துள்ளன.

எனவேதான் சமூகத்தின்பெயராலும், சமயத்தின் பெயராலும் அரசியல்வாதிகளால்  விதைக்கப்படும் போலி அச்ச நிலையில் இருந்து விடுபட்டு இத்தேசத்தை முன்கொண்டு செல்ல அரசியல் மயப்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகமாக ஒன்றிணைவோம். அதுவே இன்றைய அனைவரதும் எதிர்பார்ப்பாகும்,

முபிஸால் அபூபக்கர்
பேராதனைப் பல்கலைக்கழகம்
அரசியல் மயப்படுத்தலும், பயப்படுத்தலும். அரசியல் மயப்படுத்தலும், பயப்படுத்தலும். Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.