இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை வழங்க உள்ளோம். தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகொப்டர்களை விற்க உள்ளோம்.


இந்திய மக்களின் நெருங்கிய நண்பனாக அமெரிக்கா என்றும் இருக்கும். இந்தியர்களின் ஒற்றுமை
உலகிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராகவுள் ளோம் என அமெரிக்க ஜனாதி பதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


இந்தியா சென்றுள்ள அமெ ரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அகமதாபாத் விமான நிலை யத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைய டுத்து சபர்மதி ஆச்சிரமத்திற்கு பிரதமர் மோடியுடன் சென்று பார்வையிட்ட ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனி யா, ஆமதாபாத்தில் உள்ள சர் தார் பட்டேல் ஸ்டேடியத்தை திறந்து வைத்தனர்.


நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி க்காக மைதானத்திற்குள் பிரத மர் மோடியும், ட்ரம்பும் சென்ற போது மக்கள் ஆரவாரம் எழுப் பினர். பின்னர் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப் பட்டன. அரங்கம் நிறைந்த பார்வையாளர்களை பார்த்து மோடியும், ட்ரம்ப்பும் உற்சாக மாக கையசைத்தனர். நமஸ்தே என கூறி ட்ரம்ப் பேசத்தொடங்கினார். அவர் பேசியதாவது,


அமெரிக்கா, இந்தியாவை மதிக்கிறது. இந்திய மக்களின் நெருங்கிய நண்பனாக அமெ ரிக்கா என்றும் இருக்கும். இது போன்ற சாலை நெடுகிலுமான வரவேற்பை நான் எப்போதும் பார்த்ததில்லை. இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக் காட்டாக உள்ளது. டீ விற்பனை யாளராக இருந்தவர் நாட்டின் தலைவராகியுள்ளார். இவர் இரவு பகலாக உழைக்கிறார். மோடியை அவ்வளவு சீக்கிரம் கணிக்க முடியாது.

 அவர் கடினமானவர். இந்தியா மிகவும் செழுமை யான நாடாக திகழ்கிறது. இரு நாட்டு உறவை வலுப்படுத் துவது குறித்து பேச வந்துள் ளேன். இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை தர தயாராகவுள்ளோம்.


மிகச் சிறப்பான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. 3பில்லியன் டொலர் மதிப் பிலான இராணுவ ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக இருக் கிறது.

அத்துடன் சேர்த்து சுமார் 20 ஆயிரம் கோடி டொலர் அளவிற்கான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன.

பாக். எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலி கொப்டர்களை இந்தியாவிற்கு விற்கவுள்ளோம் என தெரிவித்தார்.

இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை வழங்க உள்ளோம். தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகொப்டர்களை விற்க உள்ளோம். இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை வழங்க உள்ளோம்.  தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகொப்டர்களை விற்க உள்ளோம். Reviewed by Madawala News on February 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.