சாய்ந்தமருது நகரசபை தொடர்பான விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகிறது.

சாய்ந்தமருது நகரசபை 2022 மார்ச்  20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது.


பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது .


1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.

அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர்.


அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும்.


கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .


கடந்த தேர்தலில் சாய்ந்தமருது மட்டுமே ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளர்களாக இருந்தனர்.
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை அறிந்த தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, அரசியல் சக்திகளின் தடைகளை தகர்த்தெறிந்து சாய்ந்தமருது நகர சபையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவா ராமசாமி
சாய்ந்தமருது நகரசபை தொடர்பான விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகிறது. சாய்ந்தமருது நகரசபை தொடர்பான விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகிறது. Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.