நாடு பூராகவுமுள்ள கடமை தவறும் கிராம சேவையாளர்களைக் கண்டுபிடிக்க சுற்றிவளைப்பு.


  பொதுமக்களின் சேவைகளை நிறைவேற்றாத கிராம சேவையாளர்களைக் கண்டுபிடிக்க, அரச
பொது நிர்வாக அமைச்சு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


   அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் 40 க்கும் மேற்பட்ட  அதிகாரிகள்,  கொழும்பு மாவட்டம் முழுவதுமுள்ள 200 கிராம சேவையாளர்கள் காரியாலயங்களில் (10) திங்கட்கிழமை  சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை  மேற்கொண்டனர்.


   குறித்த தினம் காலை 8.30 மணிக்கு இக்குழுவினர் கொழும்பு மாளிகாவத்தை, கொழும்பு கிழக்கு, மேற்கு கெத்தாராம  உள்ளிட்ட கிராம சேவையாளர்கள் காரியாலயங்களுக்குச் சென்ற வேளையில், தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வந்த பொதுமக்கள் காத்திருந்ததைக் கண்டனர்.


   அவர்களில் சிலர் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் காத்திருந்துள்ளனர். இந்நிலையில்,  கிராம சேவையாளர்கள் தமது காரியாலயங்களுக்கு காலை 9.30 மணிக்குப் பின்னரே வந்துள்ளனர். சிலர் பத்து, பதினொரு மணிக்குக் கூட தமது காரியாலங்களுக்கு சமூகமளிக்காதிருந்துள்ளனர்.


   இவ்வாறு சரியான நேரத்துக்கு கடமைக்கு வராமல்  பொதுமக்களைச் சிரமத்துக்குள்ளாக்கும் கிராம சேவையாளர்கள் தொடர்பிலான  அறிக்கைகள், விசாரணைப் பிரிவு மூலம் அரச நிர்வாக அமைச்சின் செயலாளருக்குப் பெற்றுக் கொடுக்கப்படும்.  இதன் பிரகாரம், கடமை தவறிய கிராம அதிகாரிகள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


   இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நாடு பூராகவுமுள்ள கிராம சேவையாளர்களின் காரியாலயங்களைச் சுற்றிவளைக்கும்  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

( ஐ. ஏ. காதிர் கான் )

நாடு பூராகவுமுள்ள கடமை தவறும் கிராம சேவையாளர்களைக் கண்டுபிடிக்க சுற்றிவளைப்பு.  நாடு பூராகவுமுள்ள கடமை தவறும் கிராம சேவையாளர்களைக் கண்டுபிடிக்க சுற்றிவளைப்பு. Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.