சிறந்த தலைவர் ஒருவர் இவ்வாறு தான் செயற்பட வேண்டும்




செ.தேன்மொழி
பௌர்ணமி தினத்தன்று புலனாய்வு அதிகாரிகள் சிலருக்கு பொதுமன்­னிப்பு வழங்கி விடுதலை
செய்தமை தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜப­க் ஷவுக்கு நன்றி தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்­பினர் அஜித் பி பெரேரா நாட்டின் சிறந்த தலைவர் ஒருவர் இவ்வாறு தான் செயற்பட வேண்டும் என்றும் கூறி னார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது கோத்தபாய தாம் ஆட்சிக்கு வந்தால் சிறைவைக்கப்பட்டுள்ள இரா­ணுவ புலனாய்வு அதிகாரிகள் அனைவ­ரையும் விடுதலை செய்வதாகத் தெரி­வித்திருந்தார். இதனால் பலரும் அவ­ருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். 

இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ள புல­னாய்வு பிரிவினருக்கு பிணை வழங்­குவது தொடர்பில் சிறிது காலதாமதம் ஏற்பட்டதினால் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனை­வவரும் கவலையடைந்திருந்தனர்.

இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்­பட்டிருந்த சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்க­வுக்காவது பிணை வழங்கப்பட வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். இதற்­கமைய கடந்த பௌர்ணமி தினம் சுனில் ரத்­நாயக்க உள்ளிட்ட 34 புலனாய்வு பிரிவி­னருக்கு ஜனாதிபதியின்  பொது மன்­னிப்பின் அடிப்படையில் , எந்தவித பரிந்து­ரையும் இன்றி அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சொல்வதை செய்யும் தலைவர் என்றால் இவ்வாறுதான் செயற்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி செயற்பட்டதற்காக ஜனாதிபதிக்கும் , நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் நாங்கள் நன்றித் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிறந்த தலைவர் ஒருவர் இவ்வாறு தான் செயற்பட வேண்டும் சிறந்த தலைவர் ஒருவர் இவ்வாறு தான் செயற்பட வேண்டும் Reviewed by Madawala News on January 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.